இந்தியா

”பெண்களின் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி முன்னேற்றும்” : சோனியா காந்தி உறுதி!

பெண்களின் வாழ்க்கையைக் காங்கிரஸ் கட்சி முன்னேற்றும் என மூத்த தலைவர் சோனியா காந்தி சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”பெண்களின் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி  முன்னேற்றும்” : சோனியா காந்தி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் ஏப். 17 ஆம் தேதி தொடங்கியது. முதல் மூன்று கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இன்று ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு காலையிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெண்களின் வாழ்க்கையைக் காங்கிரஸ் கட்சி முன்னேற்றும் என மூத்த தலைவர் சோனியா காந்தி சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,”சுதந்திரப் போராட்டம் முதல் நவீன இந்தியாவை உருவாக்கும் வரை பெண்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். தற்போது கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

பெண்களின் கடின உழைப்புக்கும் சிரமங்களுக்கும் நீதி கிடைக்க, காங்கிரஸ் ஒரு புரட்சிகர நடவடிக்கையை எடுத்துள்ளது. காங்கிரஸின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்குவோம்.

எங்களின் உத்தரவாதங்கள் ஏற்கனவே கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. 100 நாள் வேலைத் திட்டம், தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை அல்லது உணவுப் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும் சரி எங்கள் திட்டங்களின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்குக் காங்கிரஸ் பலத்தை அளித்துள்ளது.

மகாலட்சுமி திட்டம் நமது வேலையை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான உத்தரவாதம். இக்கட்டான நேரத்தில், காங்கிரஸின் கரம் உங்களுடன் உள்ளது. இந்தக் கை உங்கள் நிலையை மாற்றும்” என சோனியா காந்தி பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories