இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் - மேலும் 2 பா.ஜ.க நிர்வாகிகள் அதிரடி கைது!

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் மேலும் 2 பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் - மேலும் 2 பா.ஜ.க நிர்வாகிகள் அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி வேட்பாளரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி ரேவண்ணா மீது பெண் கடத்தல் வழக்கு உள்ளது.

இந்த வழக்கில் எச்.டி ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான தேவராஜ் கவுடா, பெண் ஒருவரிடம் கடந்த 10 மாத காலமாக பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் லிக்கித் கவுடா, எலகுண்ட சேத்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான லிக்கித் கவுடாவும், எலகுண்ட சேத்தனும் கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளர் பிரீத்தம் கவுடாவின் நண்பர்களாவர். அடுத்தடுத்து ஆபாச வீடியோ வழக்கில் பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருவது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories