இந்தியா

”ஒரு வாக்கு உங்களது குடும்பத்தின் தலைவிதியை மாற்றும்” : ராகுல் காந்தி MP!

இன்று 4 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

”ஒரு வாக்கு உங்களது குடும்பத்தின் தலைவிதியை மாற்றும்” : ராகுல் காந்தி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் ஏப். 17 ஆம் தேதி தொடங்கியது. முதல் மூன்று கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இன்று ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

* ஆந்திர பிரதசம் - 25

* தெலங்கானா - 17

* பீகார் - 5

* ஜார்க்கண்ட் - 4

* மேற்கு வங்கம் - 8

* உத்தர பிரதேசம் - 13

* மத்திய பிரதேசம் - 8

* மகாராஷ்டிரா - 11

* ஒடிஸா - 4

* ஜம்மு & காஷ்மீர் - 1

அதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உங்களது ஒரு வாங்கு உங்களது குடும்பத்தின் தலைவிதியை மாற்றும் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு. முதல் மூன்று கட்ட தேர்தல்கள் ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்ட அரசு அமையக்கப் போகிறது என்பதை தெளிவாக்கியுள்ளது.

உங்கள் ஒரு வாக்கு உங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories