இந்தியா

ஒருநாளுக்கு முன்பே 20 மாணவர்களுக்கு விடையுடன் நீட் வினாத்தாள் கசிவு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக வினாத்தாளும், விடைகளும் 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஒருநாளுக்கு முன்பே 20 மாணவர்களுக்கு விடையுடன் நீட் வினாத்தாள் கசிவு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
ANI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவ படிப்புக்களுக்குக் கட்டாய நீட் தேர்வை ஒன்றிய அரசு அறிவித்தது முதல் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துபோய் வருகிறது. நீட் தேர்வைத் தமிழ்நாடு அரசும், மக்களும் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு வேண்டும் என்று சட்டரீதியாக அரசு எதிர்கொண்டு வருகிறது.

அதேபோல் நீட் தேர்வால் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். மேலும் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால் இத்தைபற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவனிக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் டெல்லி, ராஜஸ்தான், பீகார்,ஜார்கண்ட் மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

தற்போது நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்பாக வினாத்தாளும், விடைகளும் 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளது. பாட்னாவில் சிக்கந்தர் யாதவ் என்பவரை நீட் தேர்வு எழுதும் 20 மாணவர்களை ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒருவீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்களுக்கு நீட் தேர்வுக்கான வினாத்தாளும் அதற்கான விடைகளும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் சோதனை செய்த போது எரிந்த நிலையில் கேள்வித்தாள்களும் மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேபோல் பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளது. புருஷோத்தம் ராய் என்பவர் ரூ.10 லட்சம் வரை பெற்றுக் கொண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார். இந்த மோடி கும்பலில் பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories