இந்தியா

தொடர்ந்து அரங்கேறும் நீட் தேர்வு மோசடி... சிக்கிய MBBS மாணவன்... பாஜக ஆளும் மாநிலத்தில் தில்லுமுல்லு !

தொடர்ந்து அரங்கேறும் நீட் தேர்வு மோசடி... சிக்கிய MBBS மாணவன்... பாஜக ஆளும் மாநிலத்தில் தில்லுமுல்லு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மருத்துவ படிப்புக்களுக்கு கட்டாய நீட் தேர்வை ஒன்றிய அரசு அறிவித்தது முதல் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துபோய் வருகிறது. நீட் தேர்வை தமிழ்நாடு அரசும், மக்களும் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு வேண்டும் என்று சட்டரீதியாக எதிர்கொண்டு வருகிறது. நீட் தேர்வால் அதிகளவு தனியார் மையங்கள் செயல்பட்டு வருகிறது.

பல லட்சம் கொடுத்து படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஏழை மாணவர்களால் சாதிக்க கடினமாக இருப்பதால், அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் முடித்து கொண்டு வருகின்றனர். நீட் தேர்வால் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். அண்மையில் கூட நீட் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள், ராஜஸ்தானில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஒரு பக்கம் தற்கொலை என்றால், மறுபக்கம் முறைகேடு என்று அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே நீட் தேர்வில் முறைகேடு நடப்பதாகவும், தேர்வுக்கு முந்தைய நாளில், வினாத்தாள் பணம் கொடுத்து வாங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இந்த முறை ராஜஸ்தானில் நீட் தேர்வு முடியும் முன்னரே, அதன் வினாத்தாள் இணையத்தில் வெளியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அரங்கேறும் நீட் தேர்வு மோசடி... சிக்கிய MBBS மாணவன்... பாஜக ஆளும் மாநிலத்தில் தில்லுமுல்லு !

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு முடியும் முன்னரே அதோடு ஆள்மாறாட்டம் செய்தும் நீட் தேர்வில் பலரும் முறைகேடு செய்துள்ளனர். அந்த வகையில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என 24 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள் மட்டும் 11 பேர். இப்படி நாடு முழுவதும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் அபிஷேக் குப்தா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியுள்ளார். தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அரங்கேறும் நீட் தேர்வு மோசடி... சிக்கிய MBBS மாணவன்... பாஜக ஆளும் மாநிலத்தில் தில்லுமுல்லு !

அபிஷேக் குப்தாவின் நண்பர் ரவிகாந்த். இவரிடம் ராகுல் குஜார் என்பவரது சகோதரர் சுராஜ் குஜார் மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த சூழலில் நீட் தேர்வு எழுதும் சுராஜ் குஜாருக்கு பதிலாக, மருத்துவ மாணவரான அபிஷேக் குப்தாவை தேர்வு எழுதுமாறு கேட்டுள்ளார். அதற்காக அவரது நண்பர் ரவிகாந்த்துடம் ராகுல் குஜார் ரூ.10 லட்சம் பேரம் பேசி ரூ.1 லட்சம் முன்பணமாகவும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவ மாணவர் அபிஷேக் குப்தா, அவரது நண்பர் ரவிகாந்த், ராகுல் குஜார், அவரது சகோதரர் சுராஜ் குஜார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவரான அபிஷேக் குப்தாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே போல் பீஹாரிலும் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories