இந்தியா

”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!

மீண்டும் பா.ஜ.க அரசின் பொருளதாதார கொள்கைகளை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் விமர்சித்துள்ளார்.

”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் வாங்கும் சத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் பொருளாதார திட்டங்களைப் பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குரலை ஒன்றிய அரசு காது கொடுத்துக் கேட்பதே இல்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் கூட பா.ஜ.கவின் பொருளாதார கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் The Telegraph இதழில் ’அடிமைத்தனத்திற்கான பாதை’ எனும் தலைப்பில் பொருளாதார நிபுணர் பிரகலா பிரபாகர் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், ”இந்தியாவில் சமத்துவமின்மை முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போதுகூட இந்தியாவின் சமத்துவமின்மை இந்த அளவுக்கு மோசமாக இருந்ததில்லை. அப்படி இருக்கையில், சமத்துவமின்மை குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை என இந்திய நிதி ஆணையத்தின் புதிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசின் கொள்கையை இதைவிட சிறப்பாக கூறிவிட முடியாது. நாட்டின் மக்கள் தொகையில் 1% பேர், தேசிய வருமானத்தில் 22 சதவீதத்தையும், நாட்டின் சொத்துக்களில் 40 சதவீதத்தையும் சொந்தமாக கொண்டுள்ளனர். இந்த 1 சதவீதம் பேரின் பங்கு உலக பணக்காரர்கள் வரிசையில் மிகவும் அதிகம் என உலக சமத்துவமின்மை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவில் வேலையற்றவர்களில் 83 சதவீத பேர் இளைஞர்கள், படித்த இளைஞர்களில் 66 சதவீதம் பேர் வேலையற்றவர்களாக உள்ளனர். இதைப்பற்றியல்லாம் கவலைப்படாதவர்களின் கையில் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் உள்ளது மிகவும் கவலை அளிக்கிறது. ஏழைகளுக்கு தலா 5 கிலோ இலவச ரேஷன் கொடுத்துவிட்டு, விமான நிலையங்களை தனது நண்பர்களுக்கு அளிப்பதே பிரதமரின் பொருளாதரக் கொள்கையாகும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories