இந்தியா

மோடியின் மத உணர்வு தூண்டல் பிரச்சாரம் : திரிணாமுல் கண்டனம் - தேர்தல் ஆணையத்தில் புகார்!

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் மனு அளித்துள்ளது.

மோடியின் மத உணர்வு தூண்டல் பிரச்சாரம் : திரிணாமுல் கண்டனம் - தேர்தல் ஆணையத்தில் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத உணர்வுகளை தூண்டி வாக்குகளைப் பெறும் மோடியின் சட்டவிரோத பிரச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசர அவசியம் என தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பது வருமாறு:-

20.3.2024 தமிழ்நாட்டில் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, "இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதிக்கிறது. இந்து மதத்திற்கு எதிராண எண்ணங்களை விதைக்கிறார்கள். ஒரு நொடி கூட வீணடிக்காமல் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இதை எப்படிப் பொறுத்துக் கொள்வது?." என மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசினார்.

இப்பேச்சு மேற்கு வங்கம், மேகாலயா, உத்தர பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. மோடி இந்த பேச்சு நமது மதச்சார்பற்ற குடியரசின் மீது திட்டமிட்ட தாக்குதல். மேலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் பிரச்சாரத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது.

பிரதமர் மோடி வேண்டும் என்றே வாக்காளர்களின் மத உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைச் சேகரிக்கிறார். எனவே மோடியின் சட்ட விரோத செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories