தமிழ்நாடு

“CAA நடந்­தது என்ன? - அதிமுகவின் துரோகம் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாதது” : திருச்சி சிவா !

அ.தி.மு.க.வின் துரோகம் - மன்னிக்க முடியாத செயல்: திருச்சி சிவா

“CAA நடந்­தது என்ன? - அதிமுகவின் துரோகம் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாதது” : திருச்சி சிவா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சி.ஏ.ஏ., குடியுரிமை திருத்த சட்டம் என்பது பற்றி கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பொதுமேடைகளிலும் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் 2019ல் நிறை வேற்றப்பட் இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கான விதிமுறைகள் (Rules) அரசிதழில் இப்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளி யிடப்பட்டதே!

நிலவுகின்ற சில குழப்பங்களை தவிர்ப்பதற்காகவும் இது குறித்து மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தினாலும் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டபோது நடந்தவைகளை விளக்க வேண்டியது அவசியமாகின்றது!

முதலில் குடியுரிமை என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமை பெற்றவருக்கு அந்நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பொது என்று சொல்லக்கூடிய அனைத்து உரிமைகளும் கிடைக்கும். எழுத்துரிமை, பேச்சுரிமை, தேர்தலில் வாக்களிக்கின்ற, இராணுவத்தில் பணியாற்றுகின்ற உரிமைகளோடு சொத்துரிமையும் உண்டு. சுருக்கமாக சொன்னால் அரசியல் சட்டம் தரும் அனைத்து உரிமைகளும், பாதுகாப்பும் வெளிநாடு செல்லும்போதும் கிடைக்கும்.

ஆதார் அட்டை, வெறும் இருப்பிட அடையாள அட்டை மட்டுமே... அதுபோல பான்கார்டும் குடியுரிமைக்கான சான்று இல்லை என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. குடியுரிமை இல்லாதோருடைய நிலை எத்தனை துயரம் நிறைந்தது என்பது விவரிக்க இயலாத ஒன்று. உரிமைகள் இல்லாத வாழ்க்கை என்பது கை, கால்கள் இருந்தும் செயலற்ற நிலையில் இருப்பது போன்றதே! இவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல நேர்ந்தால் ஒரு குற்றவாளியை விட இரக்கமற்ற முறையிலேயே நடத்தப்படுவார்கள்.

“CAA நடந்­தது என்ன? - அதிமுகவின் துரோகம் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாதது” : திருச்சி சிவா !

இப்படி குடியுரிமை இல்லாத 60,000 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் திருச்சி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை போன்ற ஊர்களில் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கழக ஆட்சி ஆறாவது முறையாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மலர்ந்ததற்குப் பின் இவர்களுக்குப் பல சலுகைகளும் பாதுகாப்பும் தரப்பட்டிருப்பதோடு குடியுரிமை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நம்முடைய நாடு 1950 ல் குடியரசாக ஆனதற்குப் பின்னால் 1955ல் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் அதற்குப் பின் 1986, 1992, 2003, 2005, 2015, 2019 என ஆறுமுறை திருத்தப்பட்டிருக்கின்றது.

இப்போது நாம் அவசியத்தின் பொருட்டு பேச வேண்டியது 2019 சட்டத் திருத்தத்தைப் பற்றி மட்டுமே! இந்த திருத்தத்தின் நோக்கம்- நமக்கு அண்டை நாடுகளாக இருக்கின்ற பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப் பட்டு ( Religiously persecuted ) 2014 க்கு முன் வரை வந்து குடியேறிய இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், புத்த மற்றும் ஜைன என ஆறு மதங்களை சார்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது என்பதே!

மேலோட்டமாக பார்க்கிறபோது இது மனிதாபிமான மிக்க ஒரு நடவடிக்கையாக தெரிந்தாலும் இதில் இஸ்லாமியர்கள் என்ற ஒரு முக்கியமான பிரிவினர் விடுபட்டிருப்பது தெரியும். பாரதிய ஜனதாவினுடைய உள்நோக்கம் வெளிப்படையாக இந்த சட்ட திருத்தத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது: மத சார்பற்ற நாடாகிய இந்தியாவில் தாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக நாடு முழுவதும் முஸ்லீம்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜும்மா மஸ்ஜித் பகுதியில் வரலாறு காணாத அளவில் இஸ்லாமிய பெண்மணிகள் பல்லாயிரக்கணக்கில் இந்த போராட்டத்தில் வீட்டிற்கு கூட செல்லாமல் இரவு பகலாக ஈடுபட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியது! ( கொரோனா பெருந்தொற்று தீவிரமான காரணத்தினாலேயே அந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தது தீர்வு எதுவும் எட்டாமலே) மக்களவையில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும் ஆளுங்கட்சி எளிதாக அந்த மசோதாவை அங்கு நிறைவேற்றியதற்குப் பின்னால் 11-12-2019 மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அனைத்து எதிர்க் கட்சிகளும் இந்த சட்ட திருத்தம் முஸ்லீம்களை புறக்கணிப்பதை சுட்டிக்காட்டி கடுமையாக எதிர்த்து உரையாற்றினார்கள். கழகத்தின் சார்பில் இந்த விவாதத்தில் நான் கலந்து கொண்டு பேசினேன்.

“CAA நடந்­தது என்ன? - அதிமுகவின் துரோகம் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாதது” : திருச்சி சிவா !

*1947 ல் நாடு விடுதலை அடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என பிரிவினை ஏற்பட்ட நேரத்தில் முகமது அலி ஜின்னா நான் இஸ்லாமியர்களுக்கென நாடொன்று கண்டிருக்கிறேன், முஸ்லீம்கள் என்னோடு வாருங்கள் என்று அழைப்பு விடுத்த நேரத்தில் இங்கிருந்த முஸ்லீம்கள் - நாங்கள் இஸ்லாமியர்கள்தான்.

ஆனால் இந்தியாதான் எங்கள் நாடு என்று இங்கேயே தங்கி நம்மோடு சகோதரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே! அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா?” என்று நான் உணர்ச்சி பொங்க கேட்டதற்கு பாராமுகமும், கேளா காதும், கேலி சிரிப்பும்தான் ஆளும் தரப்பிலிருந்து கிடைத்தது.

எதிர் கட்சிகளின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து ஏற்கிற கட்சியல்லவே பா.ஜ.க.! என்றால் இப்படி ஒரு பாரபட்சமான அணுகு முறையை மேற்கொண்டிருக்க மாட்டார்களே! மசோதாவை தோற்கடிக்க முயன்றால் இந்த சட்ட திருத்தத்தின் மூலம் பயன் பெறக் கூடிய ஆறு மதத்தை சார்ந்தவர்களின் எதிர்ப்பைப் பெற வேண்டியதிருக்கும். நமக்கு தேவை இஸ்லாமியர்களுக்கும் இந்த சலுகை கிட்டிட வேண்டுமென்பதே ! அத்தோடு தமிழ்நாட்டை சார்ந்த நாம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை பெறுவதற்கான நல்லதோர் வாய்ப்பு! ஆக தீர்வுக்கு எங்களுக்கு இருந்த வழி மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதுதான்!

இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் இலங்கைத் தமிழர்கள் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவிற்கு வரவில்லை என்ற வாதம் எடுத்து வைக்கப்படும். இதை மனதில் கொண்டு மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, ஆழ்ந்த கவனத்தோடு தி.மு.க.வின் உறுப்பினர் என்ற வகையில் நான் மூன்று திருத்தங்களை முன் வைத்தேன்.

“CAA நடந்­தது என்ன? - அதிமுகவின் துரோகம் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாதது” : திருச்சி சிவா !

1) மதரீதீயாக" துன்புறுத்தப்பட்டு என்பதோடு "இனரீதியாக” என்று சேர்க்கவும்.

2) பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் என்பதோடு "இலங்கையை சேர்க்கவும்

3) ஆறு மதங்களோடு முஸ்லீம்களை சேர்க்கவும். இந்த திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்ததும் நான் மின்னணு வாக்குப் பதிவு கேட்டேன். இந்த கோரிக்கையை ஏற்று மின்னணு வாக்குப் பதிவு நடத்த அவைத் தலைவர் உத்தரவிட்டார்.

அன்றைக்கு மாநிலங்களவையில் கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்துதான்.

1) நான்

2) ஆலந்தூர் பாரதி

3) டி கே எஸ் இளங்கோவன்

4) மு சண்முகம்

5) பி வில்சன் ஆச்சரியப்படத் தக்க அளவில் நம்முடைய திருத்தத்துக்கு ஆதரவாக 99 வாக்குகள் கிடைத்தன. அரசாங்கத்துக்கு ஆதரவாக, இந்த திருத்தங்களை எதிர்த்து 124 வாக்குகள் பதிவாயின!

வித்தியாசம் 25. அன்றைய தினம் மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 13! அது அப்படியே பா.ஜ.க. அரசாங்கத்துக்கு ஆதரவாக விழுந்தது. அந்த 13ஐ 124 ல் கழித்தால் அரசுக்கு ஆதரவு 111. அந்த வாக்குகள் திருத்தத்திற்கு ஆதரவாக அளித்திருந்தால் 112 பெற்று மிக எளிதாக நாட்டில் பெரிய போராட்டங்கள், கொந்தளிப்புகள் இல்லாமல் முஸ்லீம்களும், 60000 இலங்கைத் தமிழர்களும் குடியுரிமை பெற்றிருப்பார்கள்.

மசோதாவும் நிறைவேறியிருக்கும். நம்முடைய நீண்ட கால கோரிக்கையான இலங்கை தமிழர்கள் குடியுரிமை பிரச்சினையும் தீர்ந்திருக்கும். இன்றைக்கு இந்திய நாடு தங்களை அங்கீகரிக்கவில்லையே என குமுறி கொந்தளித்து வேதனையில் வெந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்களும் ஆறுதலடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டிருந்திருப்பார்கள்!

மதவாத பா.ஜ.க.வின் பாரபட்சமான செயலுக்கு துணை நின்று கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பினை கெடுத்து இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மிகப் பெரிய பாதகத்தை செய்த அ.தி.மு.க.வின் துரோகம் எந்த காலத்திலும் மன்னிக்க முடியா- தது நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறி வந்து சத்தியவான் வேடம் போடும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்று கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமிதான் பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த மக்கள் விரோத, மாநில உரிமைகளைப் பறிக்கின்ற எல்லா சட்டங்களுக்கும் நேற்றுவரை ஆதரவு தந்து தமிழ்நாட்டுக்கும் சிறுபான்மையினருக்கும் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத பாதகம் செய்தவர்!

- கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா.

banner

Related Stories

Related Stories