இந்தியா

”2004-ஐ போல் பா.ஜ.க படுதோல்வியடையும்” : மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்!

2004-ஐ போல் பா.ஜ.க படுதோல்வியடையும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

”2004-ஐ போல் பா.ஜ.க படுதோல்வியடையும்” : மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, " நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன். ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு நாடுமுழுவதும் விரிவான ஆலோசனைகளை நடத்தி மார்ச் 6ம் தேதி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் முதல் அறிக்கை ஜவஹர்லால் நேருவின் தலைமையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை காங்கிரஸ் எதற்காக நிற்கிறது என்து தெளிவு படுத்தியது.

பாரத் ஜோடா நியாய யாத்திரை வெறும் அரசியல் யாத்திரைகள் அல்ல. நமது அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் தொடர்பு இயக்கமாகக் குறிப்பிடப்படும். நாடு மாற்றத்தைக் கோருகிறது. ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசின் வாக்குறுதிகள் 2004 ஆம் ஆண்டின் 'இந்தியா ஒளிர்கிறது' முழக்கத்தைப் போலத் தோல்வியடையும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories