தேர்தல் 2024

பீகார் : பா.ஜ.க கூட்டணியில் பிளவு - ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த RLJP தலைவர்!

தேர்தலில் போட்டியிட ஒரு இடம் கூட ஒதுக்காததால் ஒன்றிய அமைச்சர் பதவியைப் பசுபதி பராஸ் ராஜினாமா செய்துள்ளார்.

பீகார் : பா.ஜ.க கூட்டணியில் பிளவு - ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த RLJP தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.கவின் NDA கூட்டணிக்கு 'இந்தியா' கூட்டணி கடும் சவாளாக மாறி வருகிறது. இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடுகளை வேக வேகமாக முடித்துக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

ஆனால் NDA கூட்டணியில் தொகுதிகள் உடன்பாடு செய்வதில் இன்னும் இழுபறி இருந்து வருகிறது. மேலும் கூட்டணிக் கட்சிகளுக்கு முறையாகத் தொகுதிகள் உடன்பாடு செய்யப்படாததால் அதிருப்தியிலிருந்து வருகின்றனர். இதன் வெளிப்பாடு பீகார் மாநிலத்தில் தற்போது எதிரொலித்து வருகிறது.

பீகாரில் 17 தொகுதிகளில் பா.ஜ.கவும், 16 தொகுதிகளில் நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுகிறது. அதேபோல் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடமும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் NDA கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் அக்கட்சியின் தலைவர் பசுபதி பராஸ் பா.ஜ.க மீது கடும் அதிருப்தியிலிருந்து வந்தார். இவர் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து வந்தார். தற்போது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தனது அதிருப்தியைப் பசுபதி பராஸ் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பீகாரில் NDA கூட்டணிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பசுபதி பராஸ், ராம் விலாஸ் பாஸ்வானின் உறவினராவார். கடந்த 2021 ஆம் ஆண்டு ராம் விலாஸ் பாஸ்வானுக்கு எதிராகக் கட்சிக்குள் கிளர்ச்சி செய்தார். பிறகு லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியை உருவாக்கினார். அப்போது பா.ஜ.க இவரை தன்பக்கம் இழுத்து ஒன்றிய அமைச்சர் பதவி கொடுத்தது. தற்போது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பசுபதி பராஸை கழட்டி விட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories