இந்தியா

”குரல் எழுப்பினால் மோடி என்ற அதிகாரம் கொதிப்படைகிறது” : ராகுல் காந்தி MP தாக்கு!

மோடி என்ற அதிகாரம் ஏழைகள் மீது ஜிஎஸ்டியை திணிக்கிறது என ராகுல் காந்தி MP விமர்சித்துள்ளார்.

”குரல் எழுப்பினால் மோடி என்ற அதிகாரம் கொதிப்படைகிறது” : ராகுல் காந்தி MP தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூரில் இருந்து மஹாராஷ்டிரா வரை ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நியாயப் பயணம் நேற்று மும்பையில் நிறைவடைந்தது. பின்னர் நியாய யாத்திரையின் நிறைவு கூட்டத்தில் ராகுல் காந்தி MP உரையாற்றினார்.

அப்போது ராகுல் காந்தி, நாங்கள் ஒரு சக்திக்கு எதிராக போராடுகிறோம். பிரதமர் மோடிதான் அந்த சக்தியின் முகமூடி என கூறியிருந்தார். ஆனால் சக்தி என்ற இந்துக்களின் தெய்வீ சொல்லை ராகுல் காந்தி விமர்சித்துள்ளதாக பா.ஜ.கவினர் திருத்தி கூறி வருகிறார்கள்.

மேலும் பிரதமர் மோடியும் சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கும் அதை வழிபடுபவர்களுக்கும் இடையேதான் இந்தப் போராட்டம் என கூறியுள்ளார். இதையடுத்து இதற்கு ராகுல் காந்தி தனது x சமூகவலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "ஒரு சக்தியின் முகமூடிதான் மோடி என்று கூறினேன். அந்த சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். இப்படிப்பட்ட ஒரு சக்திதான் CBI,IT,ED, ஊடகங்கள், இந்திய தொழில்துறை என இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலமைப்பையும் தனது பிடியில் வைத்துள்ளது.

இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறார். அதே நேரத்தில் விவசாயிகளின் சில ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்த அதிகாரம்தான் இந்தியாவின் துறைமுகங்கள், இந்தியாவின் விமான நிலையங்கள் விற்கிறது. ஆனால் இந்தியாவின் இளைஞர்களுக்கு அக்னிவீரன் பரிசு வழங்கி அவர்களது தைரியத்தை உடைக்கிறது.

இந்த அதிகாரம்தான் ஏழைகள் மீது ஜிஎஸ்டியை திணிக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல், நாட்டின் சொத்துக்களை ஏலம் விடுகிறது. அதனால்தான் நான் அவருக்கு எதிராக குரல் எழுப்பும் போதெல்லாம் மோடியும், அவரது பொய் இயந்திரமும் கொதிப்படைந்து கோபமடைகின்றன" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories