இந்தியா

சிறுவனுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை செய்த மத போதகர்... அதிரடியாக கைது செய்த கேரள போலிஸ் !

13 வயது சிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை கேரளாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவனுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை செய்த மத போதகர்... அதிரடியாக கைது செய்த கேரள போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது பூவாச்சல் குரக்கோணம் என்ற பகுதி. இங்கிருக்கும் பெந்தகோஸ்தே தேவாலயத்தில் அந்த பகுதியில் இருந்து மக்கள் பலரும் வந்து வழிபடுவர். இங்கு ரவீந்திரநாத் (52) என்ற நபர் ஒருவர் மத போதககராக (Pastor) இருந்து வருகிறார். இந்த சூழலில் நேற்றைய முந்தினம் அந்த பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவர் நின்றுள்ளார்.

அந்த சிறுவனுக்கு தாய் இல்லாத காரணத்தினால், அவர் பாட்டியுடன் வளர்ந்து வந்துள்ளார். எனவே பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவரது வருகைக்காக சிறுவன் காத்திருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறுவனை கண்ட அந்த பாதிரியார், அவருடன் பேச்சு கொடுத்துள்ளார்.

சிறுவனுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை செய்த மத போதகர்... அதிரடியாக கைது செய்த கேரள போலிஸ் !

பின்னர் அவரை தனது வீட்டில் வந்து காத்திருக்கும்படி அழைத்துள்ளார். இவரை நம்பி அங்கே சென்ற சிறுவனுக்கு, அந்த போதகர் சாப்பிட கேக் கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் அவரது அருகே வந்து தனது Tablet என்று சொல்லப்படும் மின் சாதனத்தை கொடுத்து, அதனை சரி பார்க்கும்படி கூறியுள்ளார்.

உடனே அந்த சிறுவனும் அதனை வாங்கி பார்த்தபோது, அதில் ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், அங்கே இருந்து செல்ல முயன்றபோது அவரது கையை பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் அந்த மத போதகர். இதையடுத்து அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிய சிறுவன் இதுகுறித்து தனது பாட்டி உட்பட உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனை அழைத்துக்கொண்டு இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் மத போதகர் ரவீந்திரநாத் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories