இந்தியா

மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியேறிய வாயு... 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் !

குளியலறையில் இருந்த ஹீட்டரை பயன்படுத்திய 6 மாத கர்ப்பிணி இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியேறிய வாயு... 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள சதாசிவ்நகரில் வசித்து வருபவர் ராமயா (23). இவரது கணவர் ஜெகதீஷ் அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ரம்யா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த சூழலில் சம்பவத்தன்று வழக்கம்போல், ஜெகதீஷ் வேளைக்கு சென்ற பின், ரம்யா வீட்டு வேலை மற்றும் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது தனது 4 வயது மகனை குளிக்க வைக்க குளியலறைக்குள் அவரை கூட்டிக்கொண்டு ரம்யா சென்றார். அந்த நேரத்தில் ஹீட்டர் ஆன் செய்து அதில் இருந்து வந்த தண்ணீரால் மகனை குளிப்பாட்டிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென அதில் இருந்து கேஸ் ஒன்று வெளியேறியுள்ளது. இதனை சுவாசித்த சில நிமிடங்களில் மகன் சட்டென்று சரிந்து விழ, என்ன என்று சுதாரிப்பதற்குள் ரம்யாவும் சரிந்தார்.

மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியேறிய வாயு... 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் !

இதையடுத்து எதேர்ச்சியாக வீட்டுக்கு வந்த ஜெகதீஸ், குளியறையில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதை கண்டு அங்கே சென்று பார்த்தபோது, மகன் மற்றும் மனைவி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கே அவருக்கு சோதனை செய்ததில் 6 மாத கர்ப்பிணியான ரம்யா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, "ஹீட்டரில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு என்ற வாயுவால்தான் ரம்யா உயிரிழப்புக்கு காரணம்". பொதுவாகவே ஹீட்டர் வாங்கும்போது மலிவான விலையில் கிடைக்கிறது என்று வாங்கக்கூடாது என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட புதுமண தம்பதி, குளியறையில் ஹீட்டரால் பாதிக்கப்பட்டு உயிழந்து கிடந்தனர் என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories