இந்தியா

ரூ.1,500 கடன் : திருப்பி கேட்டதால் ஆத்திரம்... பலமுறை கத்தியால் குத்திய நண்பர் - நடந்தது என்ன ?

ரூ.1,500 கடனை திருப்பி கேட்ட ஆத்திரத்தில் நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1,500 கடன் : திருப்பி கேட்டதால் ஆத்திரம்... பலமுறை கத்தியால் குத்திய நண்பர் - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லி மடிப்பூர் ஜே.ஜே.காலனி என்ற பகுதியில் வினோத் (29) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகமது அப்துல்லா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் எலெக்ட்ரீஷியனாக இருக்கும் அப்துல்லா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வினோத்திடம் ரூ.1,500 கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த கடனை 2 -3 நாட்களில் திருப்பி கொடுத்து விடுவதாக அப்துல்லா கூறிய நிலையில், சில நாட்கள் ஆகியுள்ளது. இதனால் வினோத் தான் கொடுத்த கடனை கேட்டுள்ளார். அப்போது அப்துல்லா பணத்தை கொடுப்பதாக கூறி நேரத்தை வீணடித்துள்ளார். இதனால் பொறுமை இழந்த வினோத், தான் கொடுத்த கடனை வசூலிப்பதாக அப்துல்லாவின் வீட்டுக்கு கடந்த 21-ம் தேதி சென்றுள்ளார்.

ரூ.1,500 கடன் : திருப்பி கேட்டதால் ஆத்திரம்... பலமுறை கத்தியால் குத்திய நண்பர் - நடந்தது என்ன ?

அங்கே அப்துல்லா இல்லை என்பதால், அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கூறி திட்டிவிட்டு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அப்துல்லா, மறுநாளே வினோத்தின் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வாங்குவதால் கைகலப்பாக மாறிய நிலையில், கோபமடைந்த அப்துல்லா, வினோத்தை கத்தியால் குத்தியுள்ளார்.

அப்போதும் ஆத்திரம் அடங்காமல், வினோத்தை பலமுறை குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 22-ம் தேதி அரங்கேறிய இந்த நிகழ்வு குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பேரில் நேற்று (25-ம் தேதி) குற்றம்சாட்டப்பட்ட அப்துல்லாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.1,500 கடனை திருப்பி கேட்ட ஆத்திரத்தில் நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories