இந்தியா

”ரூ.1 லட்சம் மதிப்பில் ஒரு நாளைக்கு இரண்டு உடைகள் அணியும் மோடி” : கிண்டல் செய்த ராகுல் காந்தி!

சிறு குறு தொழில்களை அழிக்கும் ஆயுதமாக ஜி.எஸ்.டியை பா.ஜ.க பயன்படுத்துகிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”ரூ.1 லட்சம் மதிப்பில் ஒரு நாளைக்கு இரண்டு உடைகள் அணியும் மோடி” : கிண்டல் செய்த ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்திற்கு நவ 17ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 18 ஆண்டுகளாக பா.ஜ.க தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இதனால் இம்முறையும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.கவும், ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் இந்த தேர்தல் பா.ஜ.கவுக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதோடு, பா.ஜ.க ஆட்சியில் வேலையின்மை மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதை மையமாக வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

”ரூ.1 லட்சம் மதிப்பில் ஒரு நாளைக்கு இரண்டு உடைகள் அணியும் மோடி” : கிண்டல் செய்த ராகுல் காந்தி!

இந்நிலையில் சாட்னா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி எம்.பி, "பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஆடைகளை அணிகிறார். அவர் ஒரே உடையைத் திரும்ப அணிந்து நீங்கள் பார்த்தது உண்டா?. நான் ஒற்றை வெள்ளை நிற டிஷர்ட் மட்டுமே அணிகிறேன்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அடிக்கடி சொல்லியே பிரதமரானவர் மோடி. ஆனால் இன்று நான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசுவதால் அவர் இந்தியாவில் சாதி இல்லை என்று பேசுகிறார். பா.ஜ.க கொண்டுவந்த ஜி.எஸ்.டி நடவடிக்கையால் இன்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழிந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்" என குற்றம்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories