இந்தியா

”மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதுதான் பா.ஜ.கவின் கொள்கை” : பிரியங்கா காந்தி கடும் சாடல்!

மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதே பா.ஜ.கவின் கொள்கை என காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

”மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதுதான் பா.ஜ.கவின் கொள்கை” : பிரியங்கா காந்தி கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்திற்கு நவ 17ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 18 ஆண்டுகளாக பா.ஜ.க தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இதனால் இம்முறையும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.கவும், ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் இந்த தேர்தல் பா.ஜ.கவுக்கும், காங்கிரஸ்க்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதோடு, பா.ஜ.க ஆட்சியில் வேலையின்மை மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதை மையமாக வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

”மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதுதான் பா.ஜ.கவின் கொள்கை” : பிரியங்கா காந்தி கடும் சாடல்!

இந்நிலையில், நேற்று போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி, ஜவஹர்லால் நேருவின் ஆட்சியில்தான் இந்தியாவில் ஐ.ஐ.எம் மற்றும் எய்ம்ஸ் கொண்டுவரப்பட்டது. நாட்டை முன்னேற்றுவதற்காக நேரு இப்படியான திட்டங்களைக் கொண்டு வந்தார்.

ஆனால் இப்போது இருக்கும் பா.ஜ.க ஆட்சி அரசின் பொது நிறுவனங்களைத் தொழிலதிபர்களிடம் விற்று வருகிறது. மேலும் மக்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதே பா.ஜ.கவின் கொள்கையாக உள்ளது. அரசு வேலைகள் தனியார்மயமாகி வருகிறது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்கள் பணம் என்ன ஆனது என்று ஊழியர்கள் பயப்படுகிறார்கள்.

கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று மோடி கூறுகிறார். மோடி ஜி படித்த பள்ளி காங்கிரஸால் கட்டப்பட்டது. மோடி ஜி கல்லூரிக்குச் சென்றாரா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் சான்றிதழ் அவரது முழு அரசியல் அறிவியலில் பட்டம் - காங்கிரஸ் வழங்கிய கணினி மூலம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories