தமிழ்நாடு

த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!

தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து, வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் குற்றப்பின்னணியை ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பான ஏ.டி.ஆர். நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது

அதன்படி, மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம். எல்.ஏ.க்களில் 126 பேர் மீது அதாவது 54 சதவீதத்தினர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. கட்சிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் வழக்குகளில் சிக்கி உள்ளனர்.

107 எம்.எல்.ஏ.க்களில் 56 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அந்தவகையில் த.வெ.க.வின் 19 பேர், அ.தி.மு.க.வின் 14 பேர், காங்கிரசை சேர்ந்த 2 பேரும் கடுமையான வழக்கை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் 2 பேருக்கு எதிராக கொலை வழக்கு, 6 பேருக்கு எதிராக கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    banner

    Related Stories

    Related Stories