இந்தியா

46 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் : சட்டப்பேரவையில் வெளியானது பீகார் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு!

பீகார் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு பீகார் மக்களின் பொருளாதார நிலை குறித்த விவரம் வெளியிடப்பட்டது.

46 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் : சட்டப்பேரவையில் வெளியானது பீகார் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன் முடிவுகள் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்த அந்த பட்டியலில் உள்ளவர்களின் பொருளாதார நிலை குறித்த விவரம் சட்டமன்ற கூட்டத்தின் போது வெளியிடப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.

அதன்படி பீகார் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு பீகார் மக்களின் பொருளாதார நிலை குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில்,

46 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் : சட்டப்பேரவையில் வெளியானது பீகார் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு!

"59.13 %மக்கள் சொந்த வீடு வைத்துள்ளனர்.

63,850 பேருக்கு வீடு இல்லை

40 லட்சம் மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.

94 லட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளனர்.

மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமானோர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் மாத வருமானம் ரூ.6,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கிறது.

பீகாரில் 2.97 கோடி குடும்பங்கள் உள்ளன. அவர்களில் 94 லட்சத்துக்கும் அதிகமானோர் (34.13 சதவீதம்) ஏழைகள்.

50 லட்சத்துக்கும் அதிகமான பிஹார் மக்கள் வாழ்வாதாரம் அல்லது சிறந்த கல்வி வாய்ப்புகளைத் தேடி வேறு மாநிலத்துக்குச் சென்று வசிக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் படித்து வரும் பீகார் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 5.52 லட்சம்.

வெளிநாடுகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை 27,000.

வாழ்வாதாரம் தேடி சுமார் 46 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கும், 2.17 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

பீகாரின் கல்வி அறிவு 79.70 சதவீதம் ஆக உள்ளது.

1000 ஆண்களுக்கு 953 பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். கடந்த 2011ல் இந்த எண்ணிக்கை 918 ஆக இருந்தது. "போன்ற விவரங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories