இந்தியா

சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்.. வகுப்பறையில் இருந்தபோது நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

வகுப்பறைக்குள் இருந்த சிறுமியை, தெரு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்.. வகுப்பறையில் இருந்தபோது நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்பட்டது. பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் தெரு நாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. இதனால் மக்கள் இதனை கட்டுக்குள் வைக்க கோரிக்கை வைத்தனர்.

இந்த சூழலில் தற்போது தெரு நாய் ஒன்று, பள்ளி வகுப்பறையில் நுழைந்து அங்கிருந்த மாணவியை கடித்து குதறியுள்ளது. இதில் அந்த மாணவி காயமடைந்துள்ளார். அதாவது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு என்ற பகுதி உள்ளது. இங்கு அர்ஜுனன் என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்.. வகுப்பறையில் இருந்தபோது நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

இவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், அவர் அருகில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். வீடு அருகிலேயே இருப்பதால் தினமும் நடந்து வரும் சிறுமி, தெரு நாய்கள் தொல்லை காரணமாக தந்தையும் சில நாட்களாக காரில் வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று, அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். சுமார் 10.30 மணியளவில் அவர் தனது முதல் வகுப்பில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கிருந்த தெரு நாய் ஒன்று குரைத்துக்கொண்டே பள்ளிக்குள் நுழைந்து வகுப்பிற்குள்ளும் நுழைந்துள்ளது.

சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்.. வகுப்பறையில் இருந்தபோது நேர்ந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

இதனை கண்டதும் மாணவ, மாணவியர் அலறியடித்துக்கொண்டு ஓடினர். அப்போது அந்த தெரு நாய், இந்த சிறுமி மீது பாய்ந்து கடிக்க முயன்றுள்ளது. இதனை கண்ட ஆசிரியர்கள், அங்கிருந்த காவலர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் முயன்று அந்த நாயை அங்கிருந்து துரத்தி விட்டு, சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து, பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சிறுமியை கண்டதும் கதறி அழுத தந்தை, கடந்த சில வாரங்களாக அந்த படுத்தியில் நாய்கள் தொல்லை இருப்பதாகவும், ஆனால் அந்த பகுதி அதிகாரிகள் எதுவும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். எனினும் சிறுமி காப்பாற்றப்பட்டதால் பெரிதாக சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நாய் இன்னும் பிடிபடவில்லை என்றும், விரைவில் அதனை பிடித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories