இந்தியா

போக்குவரத்து கேமரா மூலம் அனுப்பப்பட்ட அபராதம் : புகைப்படத்தில் இருந்த மர்ம பெண்- கேரளாவில் அதிர்ச்சி !

போக்குவரத்து கேமரா மூலம் அனுப்பப்பட்ட அபராதம் : புகைப்படத்தில் இருந்த மர்ம பெண்- கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. போக்குவரத்துக்கு விதிகளை பொதுமக்கள் மீறுவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சாலை விதிமீறலைக் கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கேரளாவில் சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சாலை விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது ஒரு பெரும் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் கண்ணூர்ப் பகுதியில் உள்ள பையனூர் டவுன் மேம்பாலத்தில்,சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த பகுதியில் காரில் பயணித்த ஒருவர் சீட் பெல்ட் அணியவில்லை என்பதால் அது குறித்து புகைப்படம் எடுக்கப்பட்டு அந்த காரின் உரிமையாளர் ஆதித்யன் என்பவருக்கு, விதிமீறல் அபராதம் குறித்த செய்தி அனுப்பப்பட்டது.

போக்குவரத்து கேமரா மூலம் அனுப்பப்பட்ட அபராதம் : புகைப்படத்தில் இருந்த மர்ம பெண்- கேரளாவில் அதிர்ச்சி !

இதனை பார்த்த ஆதித்யன், அபராத தொகையை செலுத்த சென்றபோது அங்கு சிசிடிவி கேமரா மூலம் அனுப்பப்பட்ட புகைப்படத்தில் தனது காருக்கு பின்னால் மர்மமான ஒரு பெண் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், இது குறித்து காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில், இது விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த போலிஸார், "அந்தப் புகைப்படம் கண்ணாடியின் பிரதிபலிப்பாக இருக்கலாம், அல்லது அந்தப் புகைப்படம் பிரின்ட் செய்யப்பட்டபோது, ஏதேனும் தவறு நடந்திருக்கலாம்" என்று கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories