இந்தியா

அடுத்தடுத்து இடிந்து விழும் பாலம் : மக்கள் உயிர் மீது விளையாடும் குஜராத் பா.ஜ.க அரசு!

குஜராத் மாநிலம் பாலன்பூர் பகுதியில் கட்டுமானப் பணியின் போதே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்து இடிந்து விழும் பாலம் : மக்கள் உயிர் மீது விளையாடும் குஜராத் பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் புபேந்திர படேல் முதலமைச்சராக உள்ளார். இம்மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புபேந்திர படேல் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு திட்டங்களில் ஊழல்கள் நடந்து வருவது வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாகப் பாலம் கட்டுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளது.

இதனால்தான் கட்டும்போதே பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த ஆண்டு மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்குக் காரணம் பா.ஜ.க ஆட்சியில் அலட்சியமே என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாமல் இருக்கிறது பா.ஜ.க அரசு. இந்நிலையில் பாலன்பூரல் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பாலத்தின் இடிபாடுகளுக்கு அடியில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் புதைந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. தற்போது பாலம் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பா.ஜ.க அரசு பாலங்களைத் தரமுடன் கட்டாமல் மீண்டும் அலட்சியத்துடனே செயல்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories