இந்தியா

“அன்று மோர்பி.. இன்று வஸ்தாதி” : ஆற்றுக்குள் துண்டாக உடைந்து விழுந்த பாலம் - நீரில் மூழ்கி 6 பேர் மாயம் ?

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் போகாவோ ஆற்றின் மீதுள்ள உள்ள பாலம் இடிந்து விழுந்ததில், ஒரு டிப்பர் லாரி மற்றும் பைக் உள்ளிட்டவை நீரில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அன்று மோர்பி.. இன்று வஸ்தாதி” : ஆற்றுக்குள் துண்டாக உடைந்து விழுந்த பாலம் - நீரில் மூழ்கி 6 பேர் மாயம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கோர விபத்திற்கு பா.ஜ.க அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் குஜராத்தில் மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் உள்ள ஆற்றை கடந்துச் செல்ல பாலம் இன்று பாஜக ஆட்சியில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை பாலத்தில் வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கும் போது, பாலம் திடீரென இரண்டு துண்டுகளாக உடைந்து ஆற்றில் விழுந்துள்ளது. அந் நேரத்தில் ஆற்றில் பயணித்த ஒரு டிப்பர் லாரி, பைக் உள்ளிட்டவை நீரில் முழ்கியது. இதில் பயணித்த மக்கள் சுமார் 10 பேர் நீரில் மூழ்கியதாகவும், அதில் 4 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த மீட்பு படையினர் மீதமுள்ள 6 பேரையும், லாரி, பைக்குளை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட 4 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த பாலத்தில் கனரக வாகனம் செல்லக்கூடாது என கூறப்பட்டாலும் அரசு சார்பில் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

அரசின் நிர்வாக திறமையின்மையே இந்த விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஆண்டில் மோர்பிர் பாலம் விழுந்த நிலையில் மீண்டும் ஒரு பாலம் உடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories