முரசொலி தலையங்கம்

“‘NEET = 0’ இதைவிட மோசடி இருக்க முடியுமா? - இதுதான் நீட் தேர்வு தகுதியா?” : கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

மாணவர்கள் சேரவில்லை என்பதற்காக, பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் போதும் என்பதை விட மோசடி இருக்க முடியுமா?

“‘NEET = 0’ இதைவிட மோசடி இருக்க முடியுமா? - இதுதான் நீட் தேர்வு தகுதியா?” : கடுமையாக சாடிய ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீட் = பூஜ்யம்

நீட் = பூஜ்யம் – இதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கும் ஒற்றை வரி தீர்ப்பு. நீட் தேர்வினால் ஏற்படும் பலன் என்பது பூஜ்யம்தான் என்பதை இதை விடத் தெளிவாகச் சொல்ல முடியாது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண் என்பது பூஜ்யமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி இருப்பதன் மூலமாக நீட் தேர்வை அம்பலப்படுத்தி விட்டார்கள். தகுதி, திறமைக்கும் இந்தத் தேர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தேர்வு நடத்துபவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

2023–24-ம் கல்வி ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடந்தது. இதற்கான முடிவுகள் மார்ச் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 291 மதிப்பெண்ணும், பொதுப்பிரிவினரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 274 மதிப்பெண்ணும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண்ணும் இதற்கான கட்-ஆப்பாக நிர்ணயிக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீடு போக, மற்ற இடங்களுக்கான மாநில கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது.

“‘NEET = 0’ இதைவிட மோசடி இருக்க முடியுமா? - இதுதான் நீட் தேர்வு தகுதியா?” : கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

இதன் முடிவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்யம் என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்திருக்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “2023 ஆம் ஆண்டுக்கான முதுநிலை படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்யமாக மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் குறைத்துள்ளது.

இது அனைத்து வகையிலும் பொருந்தும். முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்காக புதிதாக பதிவு செய்பவர்கள் மற்றும் 3 ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கும் மற்றும் தகுதி பெற்றவர்களுக்கும் மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. புதியவர்கள் இதைப் பயன்படுத்தி 3 ஆவது கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஏற்கனவே பதிவு செய்து இருப்பவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை” என்று கூறப்பட்டு இருந்தது.

நீட் தேர்வில் பெறும் கட் ஆப் மதிப்பெண்ணை வைத்தே முதுநிலைப் படிப்பில் இடங்கள் கிடைக்கும். இந்த மதிப்பெண்ணை பூஜ்யமாகக் குறைத்துவிட்டது ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும். ஏன் என்று கேட்டால், ‘நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப் படிப்புக்கான இடங்களில் மாணவ, மாணவியர் சேர்வதற்கு இந்த ஆண்டு ஆர்வம் காட்ட வில்லை’ என்கிறார்கள்.

“‘NEET = 0’ இதைவிட மோசடி இருக்க முடியுமா? - இதுதான் நீட் தேர்வு தகுதியா?” : கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

மாணவர்கள் சேரவில்லை என்பதற்காக, பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் போதும் என்பதை விட மோசடி இருக்க முடியுமா? அப்படியானால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நன்மைக்காகத்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இருக்கிறதா? இவர்களது சட்டதிட்டங்கள் அனைத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சொல்வதின் அடிப்படையில்தான் போடப்படுகிறதா?

தனியார் கல்லூரிகளில் இடம் காலியாக இருக்கிறது, இதனால் தனியார் கல்லூரிக்கு வருமானம் இல்லை. எனவே கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்துவிட்டோம் என்று விதிகளை திருத்துவதற்கு வெட்கமாக இல்லையா?

தனியார் பயிற்சி மையங்களைக் கோடி கோடியாக கொழிக்க வைப்பதற்காகவே நீட் தேர்வை நடத்துவதும் -– மருத்துவக் கல்லூரியில் இடம் காலியாக இருக்கிறது என்பதற்காக – - நீட் தேர்வு மதிப்பெண் தேவையில்லை –- அவர்கள் தேர்வு எழுதி இருந்தால் போதும் என்பதும் –- இந்திய மருத்துவக் கவுன்சில் யாருக்காகச் செயல்படுகிறது? யாருடைய ஏவலுக்குத் தலையாட்டுகிறது?

“‘NEET = 0’ இதைவிட மோசடி இருக்க முடியுமா? - இதுதான் நீட் தேர்வு தகுதியா?” : கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் நிரம்பி விட்டது, தனியார் கல்லூரியை நிரப்ப பூஜ்யம் தகுதியாக மாற்றப்படுமானால் ஒன்றிய பா.ஜ.க. அரசு தனியாருக்குச் சொந்தமான அரசு என்று தானே சொல்ல முடியும்.

கழக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் கேட்ட கேள்விகள் மிக முக்கியமானவை. “12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி வழங்கப்பட்ட போது குறைந்த பட்ச, 50 விழுக்காடு மதிப்பெண் எடுத்தால்தான் விண்ணப்பிக்கவே முடியும் என்ற சூழல் இருந்தது. அது தகுதி இல்லை, தரம் இல்லை, நான் நீட் தேர்வு வைக்கிறேன், அதுதான் தகுதி, தரம் என்று சொன்ன ஒன்றிய அரசே உனது தகுதி, தரம் இப்போது எங்கே போனது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

“நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கும் தவறான பதில் எழுதி ‘–200’ மதிப்பெண் ஒருவர் பெற்றாலும் உயர் மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. இதுதான் நீட் தேர்வு சொல்லும் தகுதியா?” என்றும் மருத்துவர் எழிலன் கேட்டுள்ளார். இதற்கெல்லாம் அவர்களிடம் முறையான பதிலை எதிர்பார்க்க முடியாது.

“‘NEET = 0’ இதைவிட மோசடி இருக்க முடியுமா? - இதுதான் நீட் தேர்வு தகுதியா?” : கடுமையாக சாடிய ‘முரசொலி’ !

‘நீட் தேர்வில் உச்ச பட்ச மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்காது’ என்று ஜோசியம் சொல்லி இருக்கிறார் முன்னாள் மருத்துவரும் இந்நாள் கவர்னருமான தமிழிசை. பூஜ்யம் எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதே அவர்களும் உள்ளே நுழைய ஏற்படுத்தித் தரும் வாய்ப்புதான். அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் அனைவருக்கும் இடம் கிடைத்துவிடுவதும் இல்லைதானே?!

குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள் என்று சொல்லி நீட் தேர்வைக் கொண்டு வந்தவர்கள், ‘பூஜ்யம்’ எடுத்தாலும் விண்ணப்பிக்கலாம் என்று சொன்னால் இந்த தேர்வு எதற்காக? எதற்காக ‘நீட்’ என்ற வேண்டாத கொடுமையைக் கட்டி அழுகிறீர்கள்? .

banner

Related Stories

Related Stories