இந்தியா

நடுவிமானத்தில் ஆபாச செயல்.. அதிர்ந்த பெண் ஆசிரியர்.. திருமணம் நிச்சயமான இளைஞர் அதிரடி கைது !

விமானத்தில் ஆசிரியரை நோக்கி ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடுவிமானத்தில் ஆபாச செயல்.. அதிர்ந்த பெண் ஆசிரியர்.. திருமணம் நிச்சயமான இளைஞர் அதிரடி கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து நாக்பூருக்கு கடந்த திங்கள்கிழமை அன்று விமானம் ஒன்று சென்றுள்ளது. அந்த அவ்விமானத்தில் சந்திராபூரைச் சேர்ந்த 40 வயதான ஆசிரியர் ஒருவர் இருந்துள்ளது. அவரின் அருகில் 32 வயது பயணி ஒருவர் இருந்துள்ளார்.

விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது அந்த ஆசிரியை நன்றாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் அருகில் இருந்த இளைஞர் அடிக்கடி அந்த ஆசிரியரை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆசிரியர் திருப்பி அவரைப் பார்த்தபோது அந்த இளைஞர் ஆசிரியரைப் பார்த்து சுயஇன்பம் செய்துகொண்டிருந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர் உடனடியாக விமானப்பணிப்பெண்களை அழைத்து அந்த இளைஞர் செய்த செயலை கூறியுள்ளார். அதன் பின்னர் விமானம், விமானநிலையம் சென்றதும், அந்த நபரை காவல்துறையில் விமான பணிப்பெண்கள் ஒப்படைத்துள்ளனர்.

நடுவிமானத்தில் ஆபாச செயல்.. அதிர்ந்த பெண் ஆசிரியர்.. திருமணம் நிச்சயமான இளைஞர் அதிரடி கைது !

விசாரணையில் அந்த நபரின் பெயர் ஃபெரோஸ் ஷேக் என்பதும், புனேவின் கோந்த்வா பகுதியைச் சேர்ந்த அவர் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதையும் போலிஸார் அறிந்துகொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். விமானத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories