இந்தியா

வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு.. ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை: 5 மாநில சட்டமன்ற தேர்தலின் முழு விவரம்!

இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு.. ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை: 5 மாநில சட்டமன்ற தேர்தலின் முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநில தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு ஆட்சி நிறைவடையவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு.. ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை: 5 மாநில சட்டமன்ற தேர்தலின் முழு விவரம்!

இதைத்தொடர்ந்து அந்த 5 மாநிலங்களிலும், மாநிலத்தை ஆளுங்கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களை தேர்தலுக்கு தயார் படுத்தி வந்துகொண்டிருக்கிறது. மேலும் சில மாநிலங்களில் காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக மகளிருக்கு தொகை, கேஸ் விலை குறைப்பு, மகளிர் இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

1. மிசோரம் - நவம்பர் 07.

2. மத்திய பிரதேசம் - நவம்பர் 17

3. தெலங்கானா - நவம்பர் 30

4. ராஜஸ்தான் - நவம்பர் 23

5. சத்திஸ்கர் - முதற்கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 07 ம் தேதி ,

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 17 ம் தேதி.

இந்த 5 மாநிலங்களுக்கு டிசம்பர் 03ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு.. ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை: 5 மாநில சட்டமன்ற தேர்தலின் முழு விவரம்!

மத்திய பிரதேசம் :

மனுதாக்கல் ஆரம்பம் - அக். 21

மனுதாக்கல் முடிவு - அக். 30

வேட்புமனு பரிசீலனை - அக்.31

வேட்புமனு திரும்பப்பெற - நவ.2

வாக்குப்பதிவு - நவ. 17

வாக்கு எண்ணிக்கை - டிச. 3

மிசோரம் :

மனுதாக்கல் ஆரம்பம் - அக். 13

மனுதாக்கல் முடிவு - அக். 20

வேட்புமனு பரிசீலனை - அக். 21

வேட்புமனு திரும்பப்பெற - அக். 23

வாக்குப்பதிவு - நவ. 7

வாக்கு எண்ணிக்கை - டிச. 3

வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு.. ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை: 5 மாநில சட்டமன்ற தேர்தலின் முழு விவரம்!

தெலங்கானா :

மனுதாக்கல் ஆரம்பம் - நவ. 3

மனுதாக்கல் முடிவு - நவ. 10

வேட்புமனு பரிசீலனை - நவ. 13

வேட்புமனு திரும்பப்பெற - நவ. 15

வாக்குப்பதிவு - நவ. 30

வாக்கு எண்ணிக்கை - டிச. 3

ராஜஸ்தான் :

மனுதாக்கல் ஆரம்பம் - அக். 30

மனுதாக்கல் முடிவு - நவ. 6

வேட்புமனு பரிசீலனை - நவ. 7

வேட்புமனு திரும்பப்பெற - நவ. 9

வாக்குப்பதிவு - நவ. 23

வாக்கு எண்ணிக்கை - டிச. 3

சத்தீஸ்கர் :

மனுதாக்கல் ஆரம்பம் - அக். 13 ; அக். 21

மனுதாக்கல் முடிவு - அக். 20 ; அக். 30

வேட்புமனு பரிசீலனை - அக். 21 ; அக். 31

வேட்புமனு திரும்பப்பெற - அக் 23 ; நவ. 2

வாக்குப்பதிவு - நவ. 7 ; நவ. 17

வாக்கு எண்ணிக்கை - டிச. 3

banner

Related Stories

Related Stories