இந்தியா

கணவனை கொன்ற மனைவி - நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன 9 வயது மகன் : 7 வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை!

அப்பாவை அம்மாதான் கொலை செய்தார் என 9 வயது மகன் நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொன்ற மனைவி - நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன 9 வயது மகன் : 7 வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் 2016ம் ஆண்டு ராமந்தீப் கவுர்மான் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த கொலை வழக்கு ஷாஜஹான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 7 வருடங்கள் கழித்து ராமந்தீப் கவுர்மான் கொலை செய்யப்பட்டதற்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் தந்தையை யார் கொலை செய்தது என்பதை அவரது 9 வயது மகன் சாட்சியாக இருந்துள்ளார்.

ராமந்தீப் கவுர்மான் பிரிட்டனில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். பிறகு இவர்கள் குடும்பத்துடன் 2016ம் ஆண்டு உத்தர பிரதேசத்திற்கு வந்துள்ளனர். அப்போது ராமந்தீப் கவுர்மான் மனைவிக்கு ரகசிய காதலன் ஒருவர் இருந்துள்ளார். இவர்களது திட்டத்தின் படியே இவர்கள் குடும்பத்துடன் ஒரு மாதம் உத்தர பிரதேசம் வந்துள்ளனர்.

கணவனை கொன்ற மனைவி - நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன 9 வயது மகன் : 7 வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை!

அதன்படி காதலும் அவரது மனைவியும் சேர்ந்து உணவில் விஷம் கலந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் கொடுத்துள்ளனர். அப்போது 9 வயது மகன் மட்டும் உணவைச் சாப்பிடாமல் இருந்துள்ளார். அப்போது ராமந்தீப் கவுர்மான் தலையில் தலையணை வைத்து அழுத்தி மனைவி கொலை செய்ததை 9 வயது மகன் நேரில் பார்த்துள்ளார். இந்த சம்பவத்தை நீதிமன்றத்தில் சாட்டியாக சொன்னபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ராமன்தீப் மற்றும் குர்பரீத் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories