தமிழ்நாடு

“மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டு மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் அண்மையில் Tamil Nadu Skill Competition 2025-ஐ நடத்தியது. இதில் பல்வேறு பிரிவுகளில் மாநில அளவில் முதலிடம் வென்ற 70 மாணவர்களுக்கு தலா ரூ.25,000, 2-ஆம் இடம் பிடித்த 69 பேருக்கு தலா ரூ.10,000 என மொத்தம் ரூ.24.40 லட்சத்துக்கான காசோலைகள் - சான்றிதழ்களை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விழாவின் போது, நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவில் பயனடைந்து, UPSC உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார்.

அதோடு, தமிழ்நாடு அரசுக்கும் - L & T, Nippon Paints, Festo, Naturals, Sri Ramakrishna Advanced Training Institute, Vummidi Bangaru, Shoba Builders உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே நம் முன்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில், திராவிடமாடல் அரசின் முன்னெடுப்பால் தமிழ்நாட்டு மாணவர்கள் - இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பணிவாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ள அத்தனை நிறுவனங்களுக்கும் துணை முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும்,நம் தமிழ்நாட்டு மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம்" என்று துணை முதலமைச்சர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், "எங்களது திறன் மேம்பாட்டுத் துறை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உதவிக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இத்துறையின் மூலம் இதுவரை 1200 மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். வரும் ஜூன் மாதத்திற்குள், தமிழக அரசு சார்பில் 100-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள்  நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்களில் இன்போசிஸ், டாடா , டிவிஎஸ் (TVS) போன்ற முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிறுவனங்களே முன்வந்து மாணவர்களுக்குத் தேவையான திறன்களை வழங்கி, அவர்களைப் பணியமர்த்தவும் உள்ளன. மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் வகையில், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலவச மடிக்கணினித் திட்டத்தை (Free Laptop Scheme) தொடங்கி வைத்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories