இந்தியா

சாலையில் நடனமாடியதை தட்டிக்கேட்ட மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திராவில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் நடனமாடியதைத் தட்டிக்கேட்டதால் மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் நடனமாடியதை தட்டிக்கேட்ட மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அபர்ணா. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் அபர்ணாவின் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடந்துள்ளது. இதில் பிரபு கலந்து கொண்டு சாலையில் நடனமாடிச் சென்றுள்ளார். அப்போது திடீரென அப்பகுதி இளைஞர்களுக்கும் பிரபுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவரது மனைவிக்குத் தகவல் சென்றுள்ளது.

பின்னர் பிரபு வீட்டிற்குச் சென்றபோது மனைவி அபர்ணா ஏன் இப்படி சாலையில் நடனமாடி தகராறு செய்தீர்கள் என கூறி சண்டைபோட்டுள்ளார். இதனால் ஆவேசமடைந்த பிரபு மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த போலிஸார் அபர்ணா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் பிரபுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories