இந்தியா

பீகார் : பணம் கேட்டு கடத்தப்பட்ட பட்டியலினப் பெண்.. நிர்வாணப்படுத்தி வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் !

பட்டியலினப் பெண்ணை நிர்வாணப்படுத்தி அவரின் வாயில் சிறுநீர் கழித்த கொடூர செயல் பீகாரில் நடைபெற்றுள்ளது.

பீகார் : பணம் கேட்டு கடத்தப்பட்ட பட்டியலினப் பெண்.. நிர்வாணப்படுத்தி வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

அதன்பின்னர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோவும், உ.பியில் தலித் இளைஞர் மீது மலம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதே போன்ற சம்பவம் தற்போது பீகாரில் நடைபெற்றுள்ளது.

பிஹார் தலைநகர் பாட்னாவின் குஷ்ருபூர் பகுதியில் பட்டியலினப் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1,500 கடன் வாங்கியுள்ளார். அதனை வட்டியோடு திரும்ப செலுத்தியுமுள்ளார்.

பீகார் : பணம் கேட்டு கடத்தப்பட்ட பட்டியலினப் பெண்.. நிர்வாணப்படுத்தி வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் !

ஆனால், பிரமோத் சிங் கூடுதல் பணம் வேண்டும் என அந்த பட்டியலின குடும்பத்தினரிடம் தொடர்ந்து தகராரில் ஈடுபட்டு வந்தார். ஆனால், இதனை அந்த பட்டியலின குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர். இதன் காரணமாக கடும் ஆத்திரம் அடைந்த பிரமோத் சிங் தனது மன்னனுடன் சேர்ந்து அந்த பட்டியலின பெண்ணை கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர், பிரமோத் சிங் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, அவரின் மகனை அழைத்து பட்டியலின பெண்ணின் வாயில் சிறுநீர் களைத்து கொடுமை படுத்தியுள்ளார். அதன் பின்னர் இந்த பெண் அங்கிருந்து தப்பி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான குற்றாவாளிகளான பிரமோத் சிங், அவரது மகன் அன்சு சிங் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories