இந்தியா

ஜி20 மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத்: உலக நாடுகள் முன்பு இந்தியா பெயரை தவிர்த்த மோடி அரசு!

ஜி20 மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி20 மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத்: உலக நாடுகள் முன்பு இந்தியா பெயரை தவிர்த்த மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரச ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைச் செயல்படுத்தி வருவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில்தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது கூட ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவின் பெயரையும் பாரத் என்று மாற்ற முயல்கிறது. இந்த மற்றத்திற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளதுதான். இந்த பெயைரை எதிர்க்கட்சிகள் வைத்ததில் இருந்தே பா.ஜ.கவினர் இந்தியா என்ற பெயரை தவிர்த்து பாரத் என்று சொல்லி வருகின்றனர்.

ஜி20 மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத்: உலக நாடுகள் முன்பு இந்தியா பெயரை தவிர்த்த மோடி அரசு!

இந்நிலையில் டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி-20 மாநாடு இன்று தொடங்கியுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களின் முன்பு அவரவர் நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக "பாரத்" என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் ஜி20 தலைவர்களைக் குடியரசு தலைவரால் விருந்துக்கு அழைக்கும் அழைப்பிதழிலும் பாரத் குடியரசு தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜி-20 மாநாட்டின் மைய அரங்கில் இந்தியா என்பதற்குப் பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பெயர் பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றாதபோது எப்படி ஜி20 மாநாட்டில் பாரத் என்ற பெயரைப் பயன்படுத்த முடியும் என எதிர்கட்சிகள் ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories