இந்தியா

மந்திரவாதி உதவியோடு கணவரை கொல்ல சதி.. Slow Poison கொடுத்த மனைவி.. கையும் களவுமாக பிடிபட்டது எப்படி ?

கணவனை கொள்வதற்காக மனைவி தனது குடும்பத்தோடு சேர்ந்து மந்திராவதி உதவியோடு விஷத்தை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மந்திரவாதி உதவியோடு கணவரை கொல்ல சதி.. Slow Poison கொடுத்த மனைவி.. கையும் களவுமாக பிடிபட்டது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை லோவர் பரேல் என்ற பகுதியில் சோமன் (55) - பிரக்தி (53) தம்பதி வசித்து வருகின்றனர். தொழிலதிபராக இருக்கும் சோமனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் மந்திரவாதி ஒருவரின் உதவியால் தனது மனைவி தனக்கு படிப்படியாக உயிரை எடுக்கும் விஷத்தை கொடுத்துள்ளதாக பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது, கணவன் மனைவிக்குள் கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு சோமனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்க எண்ணியுள்ளார் மனைவி. இதற்காக மனைவி மற்றும் அவரது சகோதர, சகோதரி ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். அதன்படி மேற்கு வங்கத்தில் டோங்கிபாபு என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர்.

மந்திரவாதி உதவியோடு கணவரை கொல்ல சதி.. Slow Poison கொடுத்த மனைவி.. கையும் களவுமாக பிடிபட்டது எப்படி ?

அவர் சோமனுக்கு படிப்படியாக உயிரை கொல்லும் விஷப்பொடியை கொடுத்துள்ளார். அந்த பொடியை சோமனுக்கு தினமும் உணவு கொடுக்கும்போது கலந்து கொடுத்துள்ளார். இவையேதும் அறியாத சோமனும் சாப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இவரது சகோதரி இந்த உண்மையை சோமனுக்கு தெரிவித்ததோடு, அவரது மனைவி மற்றும் மந்திரவாதி பேசும் ஆடியோவையும் அனுப்பியுள்ளார்.

இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த சோமன், தனியாக சமைத்து சாப்பிட தொடங்கியுள்ளார். இருப்பினும் அவரது மனைவி மீதுள்ள பயத்தில் 2020-ம் ஆனது தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் இவருக்கு உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. சுமார் 3 மருத்துவர்களிடம் இவர் பரிசோதனை மேற்கொண்டதில் இவரது வெள்ளை அணுக்கள் அதிகரித்து ஒரு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மந்திரவாதி உதவியோடு கணவரை கொல்ல சதி.. Slow Poison கொடுத்த மனைவி.. கையும் களவுமாக பிடிபட்டது எப்படி ?

சோமன் தனது சிகிச்சையை நிறுத்தினால் மீண்டும் அந்தத் தொற்று வந்து அவரது உடல் நலம் மிகவும் மோசமாக மாறியுள்ளது. மேலும் சோமன் தனது மனைவியுடன் வங்கி கணக்கு ஓபன் செய்து அந்த லாக்கரில் நகை மற்றும் ரூ.25 லட்சம் ஆகியவற்றை வைத்திருந்தார். அதையும் அவரது மனைவி எடுத்துள்ளார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த சோமன் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனுக்கு மனைவி விஷத்தை எதற்காக கொடுத்தார் என்பது குறித்த முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories