இந்தியா

எச்சரிக்கை.. நண்பனை நம்பி பைக்கில் சென்ற தோழி.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !

நம்பி பைக்கில் சென்ற இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள நண்பனின் செயல் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை.. நண்பனை நம்பி பைக்கில் சென்ற தோழி.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் மணநாக்கு என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தனது நபர்களுடன் பார்ட்டி செய்துள்ளார். அப்போது அவனவாஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்த கிரண் என்ற 25 வயது இளைஞர் ஒருவரும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். அங்கே அனைவரும் ஜாலியாக குடியும் கும்மாளமுமாக இருந்துள்ளனர்.

அனைவரும் போதையிலேயே அவரவர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அப்போது கிரணும், அந்த இளம்பெண்ணும் ஒரே வழியில் செல்ல வேண்டும் என்பதால், அந்த பெண்ணை தானே வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும், கிரணுடன் பைக்கில் சென்றுள்ளார்.

எச்சரிக்கை.. நண்பனை நம்பி பைக்கில் சென்ற தோழி.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !

அப்போது அந்த பைக் கழக்கூடம் அருகே வெட்டுரோட்டில் உள்ள வேளாண்மைத் துறை குடோனுக்கு சென்றது. அந்த பெண்ணும் எதற்கு இங்கே செல்கிறோம் என்று கேட்கவே, உடனே அந்த இளைஞரும் இது தான் வேலை பார்த்த குடோன், இங்கே பாதுகாப்பாக இருக்கும் என்று உள்ளே கூட்டி சென்றுள்ளார். முதலில் வரமாட்டேன் என்று சொன்ன அந்த பெண், கிரணின் வற்புறுத்தல் காரணமாக சென்றுள்ளார்.

எச்சரிக்கை.. நண்பனை நம்பி பைக்கில் சென்ற தோழி.. இறுதியில் நேர்ந்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !

அங்கே சென்ற அவர், அந்த பெண்ணை மிரட்டி கட்டிப்போட்டு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பல மணி நேரம் கழித்து அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்த பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தனக்கு நேர்ந்ததை கூறி, கிரண் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து கிரணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட கிரணிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நம்பி பைக்கில் சென்ற இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள நண்பனின் செயல் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories