இந்தியா

கல்லூரி மாணவியை நடுரோட்டில் துரத்தித் துரத்தி கத்தியால் தாக்கிய இளைஞர்.. புனேவில் நடந்த கொடூரம்!

புனேவில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி கத்தியால் தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

கல்லூரி மாணவியை நடுரோட்டில் துரத்தித் துரத்தி கத்தியால் தாக்கிய இளைஞர்.. புனேவில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புனேவின் சதாசிவ் போத் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண்ணும், வாலிபரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தினார்.

பின்னர் அந்த இளைஞர் உடனே மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென வாகனத்தில் வந்த இளம் பெண்னை தாக்கியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் அந்த வாலிபரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் அவரை துரத்திச் சென்றுள்ளார்.

இதைப்பார்த்த அங்கிருந்த பகுதி மக்கள் உடனே அந்த வாலிபரை பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கல்லூரி மாணவியை நடுரோட்டில் துரத்தித் துரத்தி கத்தியால் தாக்கிய இளைஞர்.. புனேவில் நடந்த கொடூரம்!

பின்னர் போலிஸார் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது முல்ஷி பகுதியைச் சேர்ந்த சாந்தனு லஷ்மன் என்பது தெரியவந்தது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான பெண் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது.

அவரை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவியை இளைஞர் துரத்தித் துரத்தி தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories