இந்தியா

சாலை விபத்தில் உயிரிழந்த 22 வயது பிரபல YouTuber .. முதலமைச்சர் இரங்கல்: சக யூடியூபர்கள் அதிர்ச்சி!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் தேவராஜ் படேல் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்த 22 வயது பிரபல YouTuber .. முதலமைச்சர் இரங்கல்: சக யூடியூபர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவ்ராஜ் படோல். 22 வயது இளைஞரான இவர் 2020ம் ஆண்டு முதல் யூடியூப் பக்கத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இவரின் Dil Se Bura Lagta Hai என்ற நகைச்சுவை வீடியோ மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை இடம் பிடித்தார். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் இவரது ரசிகர்.

இந்நிலையில் தேவ்ராஜ் படேல் நியூ ராய்பூரில் வீடியோ ஒன்றைப் படமாக்கி விட்டு அங்கிருந்து தனது நண்பர் ராகேஷ் மன்ஹர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ராய்ப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

சாலை விபத்தில் உயிரிழந்த 22 வயது பிரபல YouTuber .. முதலமைச்சர் இரங்கல்: சக யூடியூபர்கள் அதிர்ச்சி!

அப்போது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம், லாரியின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் யூடியூபர் தேவ்ராஜ் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது உயிரிழப்பு செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த, இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர் பூபேஷ் பாகலும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்"நம்மைச் சிரிக்க வைத்த தேவராஜ் படேல் இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இத்தகைய அசாத்திய திறமையை இவ்வளவு இளம் வயதிலேயே இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories