இந்தியா

“நா அவளுக்கு டீச்சர்.. எனக்கு பொண்ணு போல” -துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் விவகாரத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்

இளம்பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து நாய்க்கு வீசியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

“நா அவளுக்கு டீச்சர்.. எனக்கு பொண்ணு போல” -துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் விவகாரத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள மிரா சாலையில் இருக்கும் அபார்ட்மண்ட் ஒன்றில் உள்ள 7-வது மாடியில் சரஸ்வதி வைத்யா என்ற 32 வயது பெண்ணும், மனோஜ் சாஹினி என்ற 52 வயது ஆணும் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடியிருந்து வந்துள்ள நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு பெண்ணின் கால் உட்பட உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்த போலீசார், உடனடியாக உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து மனோஜையும் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து வீட்டை சோதனை செய்தபோது, அந்த பெண்ணின் உடலை மரம் வெட்டும் கருவி மூலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் 13 பாகங்கள் இருந்துள்ளது.

“நா அவளுக்கு டீச்சர்.. எனக்கு பொண்ணு போல” -துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் விவகாரத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்

மேலும் வீட்டில் இருந்த குக்கரில், அந்த பெண்ணின் சில பாகங்கள் வேகவைக்கப்பட்டும் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், வேகவைக்கப்பட்ட பாகங்கள் நாய்களுக்கு உணவாக போட்டது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட காதலன் மனோஜிடம் இளம்பெண் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மனோஜ் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். முன்னதாக இருவரும் லிவ் - இன் உறவில் வாழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், திக்கு ஏற்கனவே HIV தொற்று உள்ளதாகவும், மேலும் சரஸ்வதி தனக்கு மகள் போன்றவர் என்றும் பரபரப்பான மனோஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் 4 சகோதரர்கள் இருக்கும் சரஸ்வதி தனது சிறு வயதிலே தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

“நா அவளுக்கு டீச்சர்.. எனக்கு பொண்ணு போல” -துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் விவகாரத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்

தாய் இறந்தபிறகு ஆசிரமத்தில் வளர்ந்த இவர், அங்கேயே10-ம் வகுப்பு வரை படித்தார். 16 வருடங்களுக்கு முன்னர் சரஸ்வதிக்கு மனோஜ் கணக்கு சொல்லிக்கொடுத்தார். பின்னர் ஆசிரமத்தில் இருந்து தனது 18 வயதில் வெளியே வந்த சரஸ்வதி, 4 ஆண்டுகளாக தனது சகோதரி ஒருவருடன் இருந்துள்ளர். பின்னர் அங்கிருந்து மும்பைக்கு வந்த இவர், மீண்டும் மனோஜை சந்தித்துள்ளார்.

“நா அவளுக்கு டீச்சர்.. எனக்கு பொண்ணு போல” -துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் விவகாரத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்

அப்போது மனோஜ், சரஸ்வதியை தனது வீட்டிலேயே தங்கும்படி கூறியுள்ளார். இதனால் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 2008-ம் ஆண்டு தனக்கு ஒரு விபத்தில் இரத்தம் ஏற்பட்டபோது HIV தொற்று பரவியதாகவும் வாக்குமூலம் அளித்தார். மேலும் சரஸ்வதி தனக்கு மகள் போன்றவர் என்றும், அவருக்கும் தனக்கும் எந்த விதமான உடல் சார்ந்த உறவு இருந்ததில்லை என்றும் கூறினார்.

“நா அவளுக்கு டீச்சர்.. எனக்கு பொண்ணு போல” -துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் விவகாரத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்

ஆனால் சரஸ்வதிதான் தன் மீது பொசெசிவாக இருந்தார். கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியே சென்ற தான் வீட்டுக்கு திரும்பியபோது, வாயில் நுரை தள்ளியவாறு கீழே சரஸ்வதி கிடந்தார். பதறி அவரை தூக்கி பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. எனவே இந்த மரணத்தில் தான் சிக்க வேண்டாம் என்று எண்ணிய மனோஜ், அந்த உடலை வெளியேற்ற நினைத்து, துண்டுகளாக வெட்டி வீச முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

முன்னதாக சரஸ்வதி மற்றும் மனோஜ் லிவ் - இன் உறவில் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், மனோஜின் வாக்குமூலத்தால் போலீசார் தற்போது குழம்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories