இந்தியா

Telegram-ல் வந்த லிங்க்.. கிளிக் செய்த ஓய்வு பெற்ற புதுவை அதிகாரி.. லட்ச கணக்கில் மோசடி செய்த கும்பல் !

Telegram-ல் வந்த லிங்க்.. கிளிக் செய்த ஓய்வு பெற்ற புதுவை அதிகாரி.. லட்ச கணக்கில் மோசடி செய்த கும்பல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நவீன உலகில் அனைத்தும் நவீனமயக்கப்பட்டதால் எந்த அளவு நல்லது இருக்கிறதோ, அதே அளவு கேட்டதும் இருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், லிங்க் அனுப்பி அதன் மூலம் மொபைல் வங்கி கணக்கு என அனைத்தும் ஹேக் செய்கின்றனர் ஹேக்கர்கள். மேலும் வணிகரீதியாக வரும் லிங்குகளை நம்பி அதில் சிலர் முதலீடு செய்தும் ஏமாறுகின்றனர்.

அண்மையில் கூட சென்னையில் தாய்க்கு உதவ எண்ணி, இன்ஸ்டாவில் வந்த லிங்கை நம்பி சுமார் ரூ.30,000 பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இன்ஸ்டாவில் வந்த லிங்கை நம்பி லட்ச கணக்கில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டார்.

Telegram-ல் வந்த லிங்க்.. கிளிக் செய்த ஓய்வு பெற்ற புதுவை அதிகாரி.. லட்ச கணக்கில் மோசடி செய்த கும்பல் !

அந்த வகையில் தற்போதும் அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சார்ந்த ராம மூர்த்தி. 58 வயதுடைய இவர், தனியார் நிறுவனத்தில் உயர் பதவி ஒன்றில் பணியாற்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றார். தற்போது வீட்டில் சும்மா இருப்பதாக எண்ணிய இவர், தான் வைத்திருக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி டெலிகிராம், இன்ஸ்டா, முகநூல் என சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் வியாபரங்களை பார்த்துள்ளார். அப்போது இவருக்கு டெலிகிராமில் லிங்க் ஒன்று வந்துள்ளது. அவரும் அதனை கிளிக் செய்து பார்த்தபோது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் தின்தோறும் ஒரு இலாபம் கிடைக்கும் என்றும் சில வீடியோக்களை பார்த்து அதற்கான ரிவியூ கூறினால் அதற்கும் பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Telegram-ல் வந்த லிங்க்.. கிளிக் செய்த ஓய்வு பெற்ற புதுவை அதிகாரி.. லட்ச கணக்கில் மோசடி செய்த கும்பல் !

இதனை நம்பிய ராம மூர்த்தியும், தன்னிடம் இருந்த 50 லட்சம் பணத்தில் 39 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். அந்த பணத்தை சிறிது சிறிதாக சுமார் 17 முறை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, அந்த மோசடி கும்பல் சொன்னதைக் நம்பி போட்டுள்ளார். ஆனால் போட்ட பணம் திரும்ப வரவில்லை. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை ராம மூர்த்தி உணர்ந்தார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆன்லைன் வாயிலாக சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் கீர்த்தி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Telegram-ல் வந்த லிங்க்.. கிளிக் செய்த ஓய்வு பெற்ற புதுவை அதிகாரி.. லட்ச கணக்கில் மோசடி செய்த கும்பல் !

இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புதியதாக பொறுப்பேற்றிருக்கும் ஐபிஎஸ் அதிகாரி மணிஷ் கூறுகையில், "கடந்த 2 மாதங்களில் மட்டும் மூன்று கோடிக்கும் அதிகமான பணத்தை பொதுமக்கள் இதுபோன்ற இணைய வழி மோசடிக்காரர்களை நம்பி இழந்துள்ளனர். முக்கியமாக டெலிகிராம் இன்ஸ்டாகிராமில் வருகின்ற லிங்கில் சென்று முதலீடு செய்தால் உங்களது பணத்தை முழுவதுமாக இழக்க நேரிடும்.

இதுபோன்று யார் என்றே தெரியாத நபர்களிடம் முதலீடு செய்து உங்களுடைய பணத்தை இழக்க வேண்டாம். எனவே பொதுமக்கள் இதுபோல் டெலிகிராம் இன்ஸ்டாகிராமில் வருகின்ற அனைத்து முதலீட்டு வாய்ப்புடெலிகிராம் இன்ஸ்டாகிராமில் வருகின்ற அனைத்து முதலீட்டு வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளையும் நம்பி ஏமாற வேண்டாம்." என்று அறிவுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories