தமிழ்நாடு

கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தை.. கதறி அழுத தாய்: சோகத்தில் குடும்பம்!

திண்டுக்கல்லில் கொதிக்கும் தண்ணீரில் விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தை.. கதறி அழுத தாய்: சோகத்தில் குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும், பிறந்த ஆறு மாதமேயான பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தாய் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். பிறகு கொதிக்கும் தண்ணீரை எடுத்து வீட்டின் கழிவறையில் உள்ள பாத்திரத்தில் ஊற்றியுள்ளார்.

கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தை.. கதறி அழுத தாய்: சோகத்தில் குடும்பம்!

பிறகு வீட்டின் முன் கதவை அடைப்பதற்காகக் கழிவறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது கழிவறையிலிருந்த குழந்தை ரித்திகா கொதித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். பிறகு குழந்தையை மீட்டு அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தை.. கதறி அழுத தாய்: சோகத்தில் குடும்பம்!

இங்குக் குழந்தை ரித்திகா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories