இந்தியா

தாலி கட்டும் நேரத்தில் ஓடி போன மாப்பிள்ளை.. 20 கி.மீ வரை ஓடி சென்று பிடித்த மணமகள்.. பின்னணி என்ன ?

தாலி கட்டும் நேரத்தில் ஓடி போன மாப்பிள்ளையை சுமார் 20 கி.மீ வரை ஓடி சென்று பிடித்த மணமகளின் உத்தர பிரதேசத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

தாலி கட்டும் நேரத்தில் ஓடி போன மாப்பிள்ளை.. 20 கி.மீ வரை ஓடி சென்று பிடித்த மணமகள்.. பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் அதான் என்ற பகுதி உள்ளது. இங்கு இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டிலும் இந்த விவகாரம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் அமர்ந்து சமரசம் பேசி, இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. பெரிய அளவில் திருமணம் வேண்டாம் என்று, அருகில் இருந்த கோயில் ஒன்றில் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். அதன்படி திருமண நாள் அன்று உற்றார் உறவினர் என அனைவரும் திருமணத்துக்கு வருகை தந்தனர். திருமணத்துக்கு மணமகளும் ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கு மாப்பிள்ளை வரவில்லை. நீண்ட நேரமாகியும் மணமகன் வரவில்லை என்பதால், அவரை தேடி மணமகளே சென்றார்.

தாலி கட்டும் நேரத்தில் ஓடி போன மாப்பிள்ளை.. 20 கி.மீ வரை ஓடி சென்று பிடித்த மணமகள்.. பின்னணி என்ன ?

ஆனால் அவர் தேடிய இடத்தில் மாப்பிள்ளை இல்லை. இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்னாள், மணமகனுக்கும் மணமகளுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்ட மாப்பிள்ளை, திருமணத்துக்கு வரமாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மணமகளே, மாப்பிள்ளையை தேடி சென்றுள்ளார்.

தாலி கட்டும் நேரத்தில் ஓடி போன மாப்பிள்ளை.. 20 கி.மீ வரை ஓடி சென்று பிடித்த மணமகள்.. பின்னணி என்ன ?

தொடர்ந்து சென்ற அவர், சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் மணமகனை கண்டுபிடித்தார். அங்கே பேருந்துக்காக காத்திருந்த அவரை, பிடித்து கையோடு மீண்டும் கோயிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டார். சிறிதாக வாக்குவாதம் ஏற்பட்டதால் திருமணத்துக்கு வரமாட்டேன் என்று காணாமல் போன மணமகனை சும்மர் 20 கி.மீ துரத்தி சென்று பிடித்த மணமகளின் செயல் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதே போல் திருமணத்தின் போது, வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் நிகழ்வு, மணமேடையிலேயே மணமகன் போதையில் தூங்கி வழியும் நிகழ்வு என பல நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் விநோதமாக இருப்பதாக கூறி இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories