இந்தியா

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!

பிரியாணி, புர்க்கா, கேரளா ஸ்டோரி போன்ற படங்கள் மிக அதிகமாக இஸ்லாம் மதம் மீதும் இஸ்லாமிய ஆண்கள் மீதும் வெறுப்பை பரப்பும் வேலைகளை செய்ய உருவாக்கப்பட்டவையாக பார்க்கப்படுகின்றன.

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

வளர்த்துவிடப்படுகிறதா இஸ்லாமோஃபோபியா?

இந்தியச் சமூகம் எப்போதுமே இஸ்லாமியர்களை எதிரிகளாகவும் பிற நாட்டவராகவும் சித்தரித்து வந்திருக்கிறது. பாஜக போன்ற இந்துத்துவ ஆட்சி நடக்கும் இன்றைய சூழலில், இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு, அம்மதம் சார்ந்த வெறுப்பாகவும் கூர்மையடையும் இடத்தை அடைந்திருக்கிறது. சமீபத்திய ‘கேரளா ஸ்டோரி’ படம், இஸ்லாம் மீதான வெறுப்பு பிரசாரத்துக்கு ஒரு உதாரணம் மட்டும்தான்.

இஸ்லாமோஃபோபியா அல்லது இஸ்லாமியர் - இந்துக்கள் என்கிற இருமை பிரச்சினை பாபர் மசூதி இடிப்பின்போது வட நாட்டில்தான் கொழுந்து விட்டு எரியும் விஷயமாக இருந்தது. அதே காலக்கட்டத்தில் அப்பிரச்சினையை தமிழ்ச்சூழலுக்கு முதன்முறையாக ‘ரோஜா’ படம் கொண்டு வந்து விட்டது. அப்போது கூட பெரிய அளவுக்கு தமிழ் மக்கள் அப்பிரச்சினை சார்ந்து ஈர்க்கப்பட்டுவிடவில்லை. ‘பாட்ஷா’ என்கிற தலைப்புடன் உச்சநட்சத்திரம் நடிக்கும் சூழல்தான் தமிழ்நாட்டில் நிலவியது.

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!

நாளடைவில் ‘பம்பாய்’ போன்ற படங்கள் இன்னும் இஸ்லாமியர் - இந்து பிரச்சினையை தீவிரப்படுத்த துணைபுரிந்தன. பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிக்கும் போலீஸ்காரர்கள் தமிழ் சினிமாவில் அதிகம் உருவாக்கப்பட்டு, நரம்பு புடைக்க இந்திய பெருமை பேசும் காட்சிகள் உருவாகத் தொடங்கின.

2001ம் ஆண்டில் அமெரிக்காவின் உலக வர்த்தக நிறுவன கட்டடங்கள் தகர்க்கப்பட்ட பிறகு நேர்ந்த இஸ்லாமிய நாடுகள், பிற நாடுகள் என்கிற இருமை போக்கு சர்வதேச அளவில் ஊக்கம் பெறத் தொடங்கியது. இந்தியாவிலும் அதன் விளைவுகள் தென்பட்டன. தமிழ்சினிமாவின் வில்லன்கள் பெரும்பாலும் இஸ்லாமிய தீவிரவாதிகளாகத் தொடங்கினர்.

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!

விஸ்வரூபம் போன்ற படங்கள் கதை சுவாரஸ்யத்துக்காகவும் அமெரிக்க விசுவாசத்துக்காகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, கோவையில் இயங்குவதாகவெல்லாம் இட்டுக் கட்டின. எதிரி நாடு என முதலில் உருவாக்கப்பட்ட வெறுப்பு, பின் இஸ்லாமிய நாடு என ஆக்கப்பட்டு, பின் அது இஸ்லாம் வெறுப்பாகி இப்போது இஸ்லாமியர் மீதான வெறுப்பாக பரிணமித்திருக்கிறது.

பாஜக போன்ற இந்துத்துவ கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, தாக்குதலாகவும் பிரசாரமாகவும் இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. பிரியாணி, புர்க்கா, கேரளா ஸ்டோரி போன்ற படங்கள் மிக அதிகமாக இஸ்லாம் மதம் மீதும் இஸ்லாமிய ஆண்கள் மீதும் வெறுப்பை பரப்பும் வேலைகளை செய்ய உருவாக்கப்பட்டவையாக பார்க்கப்படுகின்றன.

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!

இந்துத்துவ பாசிசம் இந்திய துணைக்கண்டம் முழுக்க பரவி தனது கொடுக்குகளை எல்லா திசைகளிலும் நீட்டிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் முற்போக்கு சமூகம் இஸ்லாமிய வெறுப்பு பிரசாரத்தை எதிர்கொள்வதில் சற்றே தடுமாற்றம் கொள்ளும் நிலை இருக்கிறது.

இஸ்லாமியர் மீது அமைப்புரீதியாக கட்டப்பட்ட வெறுப்பு, நாத்திகவாதம் மற்றும் முற்போக்குதன்மையுடன் கைகுலுக்கும்போது ஏற்படும் சூழல் கொண்டிருக்கும் உள்குத்தை நாம் கவனிக்க தவறி விடுகிறோம்.

'புர்க்கா' என படத்திற்கு பெயர் வைத்துவிட்டு, நாயகன் பிற மதங்களையும் ஒன்றிரண்டு வாக்கியங்களில் விமர்சிப்பதை கொண்டு எல்லா மதங்களையும் விமர்சிக்கும் படமாக அதைக் கொள்ள முடியாது. அப்படத்தில் முக்கியமான ஓர் ஆபத்தும் இருக்கிறது.

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!

இஸ்லாமிய மதத்தை stereotype செய்து சமூகவிலக்கம் செய்ய, அப்படம் தேர்ந்தெடுத்திருப்பது முற்போக்காளர்களின் மொழியை!

லிபரல்தன்மையுடன் பெண் விடுதலை மற்றும் நாத்திகவாதம் பேசும் முற்போக்காளர் அப்படம் பார்க்கையில் குழம்பிப் போகிறார். தன் மொழியைப் பேசுவதால் அது புரட்சிகர படம் போன்ற தோற்றம் கொள்கிறது. எனவே அப்படத்தை ஆதரிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்கவே கூடாதா?

விமர்சிக்கலாம். நன்றாகவே விமர்சிக்கலாம். விமர்சிக்கும் அதே நேரத்தில் பிற மதங்களையும் ஒன்றாக வைத்து பேச வேண்டும். இஸ்லாமிய மதத்தை மட்டும் தனியாக வைத்து 'ஸ்பெஷலாக' விமர்சிக்கக் கூடாது. காரணம்?

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!

இந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாம், பெரும்பான்மை மதம் இல்லை. இந்திய அரசிலும் அதிகாரத்திலும் சட்டத்திலும் ஊடாடி ஆதிக்கம் செலுத்துமளவுக்கான எண்ணிக்கையும் அதற்கு கிடையாது. பெரும்பான்மை மதம், அரசிலும் அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் சிறுபான்மை மதத்தை விமர்சிப்பது யாருக்கு சாதகமாக அமையும்?

ஆப்கானிய தலிபான் ஆட்சியில் அமர்ந்து கொண்டு இந்து மதத்தை விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்க முடியும்?

இந்திய துணைக்கண்டத்தில் இன்று இஸ்லாமை பொறுத்தவரை இரண்டு முக்கியமான காட்சிகள் வரலாறில் உறைந்திருக்கிறது. ஒன்று பாபர் மசூதியின் உச்சி மீது ஏறி நின்று கடப்பாரைகள் இறக்கப்படும் காட்சி. இன்னொன்று காவிக்கொடிகளுடன் சுற்றி நின்று கொண்டு 'ஜெய்ஸ்ரீராம்' என முழங்கிய சங்கிகளின் கூட்டத்துக்கு முன் ஒற்றையாய் கை உயர்த்தி 'அல்லாஹு அக்பர்' என கோஷம் போட்ட புர்க்கா அணிந்த மாணவியின் காட்சி.

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!

'இந்து மதத்தைதான் விமர்சிக்கிறார்கள். பிற மதங்களை விமர்சிப்பதில்லை. இவர்கள் போலி மதச்சார்பின்மை பேசுகிறார்கள்' என சங்கிகள் சுழற்றி போடும் சோழிகளுக்கு ஆட்டம் ஆட முயன்று பிற மதங்களையும் விமர்சிப்போம் என இறங்கினால் இந்திய சமூகத்தை நாம் புரிந்து கொள்ளவில்லை என அர்த்தம்.

இந்தியச் சமூகத்தின் வேர்களாக மண் பிடித்து நிற்பது இந்து மதம்தான். இஸ்லாமியம் இல்லை, கிறித்துவம் இல்லை. இத்தகைய சூழலில் கிளம்பி வந்து 'செலக்டிவ்' முற்போக்குத்தனம் பேசுவதும் பெரும்பான்மைவாதம்தான்.

உதாரணமாக இவரைப் பாருங்கள்:

இஸ்லாமிய மதத்தை விமர்சிக்க கூடாதா? மோடி ஆட்சியில் வளர்த்துவிடப்படும் இஸ்லாமோஃபோபியா? : சிறப்புக் கட்டுரை!

"காட்டுமிராண்டித்தனமான நடைமுறை, வரலாற்றின் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிட்டது. நாடாளுமன்றம் முத்தலாக் முறையை ஒழித்து, இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை சரி செய்துவிட்டது. இது பாலியல் நீதிக்கு கிடைத்த வெற்றி. சமூகத்தில் சமத்துவம் அதிகரிக்க இது உதவும்."

'அடேங்கப்பா.. தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போலயே' என நம்மை வியக்க வைக்குமளவுக்கு லிபரலாக பேசியிருக்கும் இந்த நபர் யார் தெரியுமா?

பிரதமர் மோடி!

இப்படித்தான், ஆடுகள் நனைவதாக ஓநாய்கள் அழுகின்றன. நமக்கு ஆடுகள் நனைவதில் உண்மையில் கவலை இருக்கலாம். ஆனால் ஓநாயையும் அடையாளம் காட்டி அழுவதுதான் சரியாக இருக்கும். இல்லையெனில் ஆடும் பிழைக்காது. நாமும் பிழைக்க மாட்டோம்.

banner

Related Stories

Related Stories