இந்தியா

ஜூஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை.. மும்பையில் வீடு தேடிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் !

மும்பையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை.. மும்பையில் வீடு தேடிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்ச்கேட்டில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் 24 வயது மாணவி ஒருவர் journalism படித்து வருகிறார். இவர் வெளியூரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் மும்பையில் படிக்க வந்துள்ளார். எனவே தனக்கு வீடு தேவை என்று அழைத்துள்ளார்.

அப்போது இவருக்கு பாண்டே என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவரது உதவியால் மாணவிக்கு வீடு கிடைத்துள்ளது. வீடு கிடைத்த பின்னர் அந்த பாண்டே இந்த பெண்ணை பின் தொடர்ந்துள்ளார். அந்த பெண் தனியாக இருப்பதால் பாண்டே அவரை பின் தொடர்ந்தது மட்டுமின்றி அடிக்கடி போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்துள்ளார்.

ஜூஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை.. மும்பையில் வீடு தேடிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் !

அதுமட்டுமின்றி, அந்த பெண்ணின் வீட்டின் முன் நெடு நேரம் நின்று கண்காணிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதையெல்லாம் அந்த பெண் கண்டித்தும் பாண்டே திருந்தவில்லை. மாறாக மேலும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சுமார் 4 மாத காலமாக தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் பாண்டே.

இதையடுத்து கடந்த 14-ம் தேதி அந்த மாணவிக்கு பாண்டே போன் செய்துள்ளார். மிகவும் அவசரம் என்று கூறி சந்திக்க வேண்டுமென பேசியுள்ளார். இதனால் அந்த மாணவியும் இவரை ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளார். அங்கே இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது மாணவிக்கு தெரியாமல் மயக்க மருந்து கலந்து ஜூஸ் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் வேண்டாம் என்று மாணவி கூறவே பிறகு வற்புறுத்தியதால் மாணவியும் குடித்துள்ளார்.

ஜூஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை.. மும்பையில் வீடு தேடிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் !

ஜூஸை குடித்ததும் மாணவி மயக்கமடைந்தார். இதைத்தொடர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த பாண்டே அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். பின்னர் மாணவி கண்விழித்து பார்த்த பிறகு, இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும் பாண்டே மிரட்டியுள்ளார். ஆனால் இந்த மாணவியோ மிரட்டலுக்கு பயப்படாமல் தைரியமாக வந்து போலீசில் பாண்டே மீது புகார் கொடுத்தார்

ஜூஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை.. மும்பையில் வீடு தேடிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் !

ஆனால் மாணவி புகார் கொடுத்த பிறகு சுமார் ஒரு வாரம் கழித்தே பாண்டே மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் பாண்டேவை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் தற்போது பாண்டே முன் ஜாமீனுக்கு தாக்கல் செய்துள்ளார். ஒருவேளை அவரது ஜாமீனை நீதிமன்றம் நிராகரித்தால், அவரை உடனடியாக கைது செய்வதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரு ஊடகவியல் கல்லூரி மாணவி ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories