இந்தியா

“YOUTUBE வீடியோவை Subscribe செய்தால் பணம் கிடைக்கும்?” : ஆசை வார்த்தையை நம்பி ரூ.7 லட்சத்தை இழந்த பெண் !

YOUTUBE வீடியோவை Subscribe செய்தால் பணம் கிடைக்கும் என்ற வார்த்தையை நம்பிய இளம்பெண் ஒருவர் ரூ.7.5 லட்சத்தை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“YOUTUBE வீடியோவை Subscribe செய்தால் பணம் கிடைக்கும்?” : ஆசை வார்த்தையை நம்பி ரூ.7 லட்சத்தை இழந்த பெண் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் பொதுமக்களுக்கான சேவைகளும், வாய்ப்புகளும் அதிக அளவில் கிட்டும் அதே நேரத்தில் இணைய வழிக்குற்றமான சைபர் குற்றங்களும் தினந்தோறும் உருமாறி கொண்டே வருகின்றன. சமீபகாலத்தில் இரண்டு புதுவகை சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது.

Youtube வீடியோக்களை லைக் செய்யும்படி கூறி, பின்னர் பகுதி நேர வேலை வாய்ப்பு அல்லது முதலீடு என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் குற்றம் ஒருவகை. குறிப்பாக, குற்றவாளிகள் டெலிகிராம் அல்லது வாட்ஸ் அப்பில் youtube வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று தொடர்பு கொள்வர். அவ்வாறே சில வீடியோக்களை லைக் செய்த பின்னர், பகுதி நேர வேலை அல்லது சிறிய அளவிலான முதலீடு செய்து பெரும் லாபம் அடையலாம் என்று ஆசை காட்டுவார்.

“YOUTUBE வீடியோவை Subscribe செய்தால் பணம் கிடைக்கும்?” : ஆசை வார்த்தையை நம்பி ரூ.7 லட்சத்தை இழந்த பெண் !

அதை உண்மை என்று எண்ணி தொடர்ச்சியாக பேசும் பொது மக்களிடம் ஒரு போலி வெப்சைட்டை கொடுத்து லாகின் செய்ய சொல்லி முதலில் சிறிய அளவில் பணத்தைக் கட்ட சொல்வார்கள். முதலில் லாபமாக சில ஆயிரங்களில் பணம் திரும்ப கிடைக்கும். அதை நம்பி அதிக அளவில் பணத்தை பொதுமக்கள் செலுத்திய பிறகு, அதற்கேற்றார் போல் பெரிய தொகை அந்த வெப்சைட்டில் காட்டப்படும்.

ஒரு கட்டத்தில் வெப்சைட்டில் காண்பிக்கப்படும் பணத்தை எடுக்க முயலும் போது, பல்வேறு கட்டணங்களான withdrawal fee, பிராசசிங் fee, என்று கட்ட சொல்லுவர். பணம் கட்ட தவறும் பட்சத்தில் அக்கவுண்ட் close ஆகிவிடும் என்றும் பயமுறுத்துவர். திரும்பத் திரும்ப அவர்கள் கேட்கும் பணத்தை கட்டினாலும் கூட ஒருபோதும் பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் வந்து சேராது.

“YOUTUBE வீடியோவை Subscribe செய்தால் பணம் கிடைக்கும்?” : ஆசை வார்த்தையை நம்பி ரூ.7 லட்சத்தை இழந்த பெண் !
Yuri Arcurs

சில நாட்களில் வெப்சைட்டை Down செய்துவிட்டு குற்றவாளிகள் மொத்தமாக தடயங்களையும் அழித்து விடுவர். வங்கியிலிருந்து அனுப்புவது போல் மோசடி மெசேஜ் அனுப்பி பொதுமக்களின் பெயரில் லோன் எடுத்து மோசடி செய்யும் குற்றம்.

குற்றவாளிகள், சில தனியார் வங்கிகளின் லோகோவினை வாட்சப் DP-யாக வைத்துக்கொண்டு, அந்த எண்ணில் இருந்து பொதுமக்களுக்கு வங்கி அனுப்புவது போல் மெசேஜ் அனுப்புவர், அதில், வங்கி கணக்கோடு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கவில்லை எனில் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்று குறிப்பிட்டு லிங்க் ஒன்று தரப்பட்டிருக்கும்.

“YOUTUBE வீடியோவை Subscribe செய்தால் பணம் கிடைக்கும்?” : ஆசை வார்த்தையை நம்பி ரூ.7 லட்சத்தை இழந்த பெண் !

அந்த லிங்கை கிளிக் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட வங்கியில் முகப்பு பக்கத்தை போன்றே காட்சியளிக்கும். அதில் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொண்டு பொதுமக்கள் லாகின் செய்யும்போது, அந்த தரவுகள் சைபர் கிரிமினல்களுக்கு சென்று விடும். அண்மையில் கூட Youtube வீடியோவுக்கு லைக் செய்தால் சம்பாதிக்கலாம் என்ற ஒரு செய்தியை நம்பி நபர் ஒருவர் பணத்தை இழந்தார். தற்போதும் கூட அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், அவருக்கு வீட்டில் இருந்தே ஈசியாக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதனை நம்பிய அந்த பெண்ணும் அவர்களுடன் பேசி வந்துள்ளார். தொடர்ந்து சில குறிப்பிட்ட youtube சேனல்களை Subscribe செய்தால் சம்பதிக்கலாம் என்று கூறியதை நம்பி அவரும் செய்துள்ளார்.

“YOUTUBE வீடியோவை Subscribe செய்தால் பணம் கிடைக்கும்?” : ஆசை வார்த்தையை நம்பி ரூ.7 லட்சத்தை இழந்த பெண் !

தொடர்ந்து தங்கள் வேலைக்கு பணம் தருவதாக கூறி வங்கி விவரங்களை அந்த பெண்ணிடம் கேட்க, அவரும் கொடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து அவர்கள் கேட்க கேட்க விவரங்களை இந்த பெண்ணும் கூறி, அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.7.5 லட்சத்திற்கும் மேல் அந்த மர்ம கும்பல் எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் இதுகுறித்து சைபர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட புதுச்சேரியில் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறிய நபர்களை நம்பி ஆராய்ச்சி மாணவி ஒருவர் ரூ.4 லட்சத்தை இழந்துள்ளார். இதுபோன்ற மோசடி கும்பலிடம் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories