இந்தியா

பச்சிளம் குழந்தையை கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நாய்.. கர்நாடகாவில் நடந்த அவலம்!

கர்நாடகாவில் பச்சிளம் குழந்தையை நாய் கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பச்சிளம் குழந்தையை கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நாய்..  கர்நாடகாவில் நடந்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள மகப்பேறு வார்டு அருகே கடந்த சனிக்கிழமையன்று நாய் ஒன்று பிறந்த பெண் குழந்தையின் உடலை கவ்விக் கொண்டு சுற்றித்திரிந்து வந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனையின் பாதுகாவலர்கள் நிர்வாகத்திடம் இது பற்றி தெரிவித்துள்ளனர். மேலும் நாயை விரட்டி குழந்தை உடலை மீட்டனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

பச்சிளம் குழந்தையை கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நாய்..  கர்நாடகாவில் நடந்த அவலம்!

இதையடுத்து நாய் கடித்து குழந்தை இறந்ததா? அல்லது அதற்கு முன்பே இறந்ததா? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியாததால் அது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு மருத்துவமனை நிர்வாகம் இறந்த குழந்தை இந்த மருத்துவமனையில் பிறக்கவில்லை என்றும் எங்கோ பிறந்த குழந்தையை இங்கு எடுத்து வந்து பெற்றோர் போட்டுச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

பச்சிளம் குழந்தையை கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நாய்..  கர்நாடகாவில் நடந்த அவலம்!

இதையடுத்து அருகே உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிப் பெண்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பச்சிளம் குழந்தையை நாய் கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories