சினிமா

“புலியே 2 அடி பின்னால வச்சா..” : ‘புஷ்பா 2’ ட்ரைலர் வெளியானது - கவனத்தை ஈர்க்கும் வசனம்!

புஷ்பா தி ரூல் படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

“புலியே 2 அடி பின்னால வச்சா..” : ‘புஷ்பா 2’ ட்ரைலர் வெளியானது - கவனத்தை ஈர்க்கும் வசனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் இந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகப்பட்ட அந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.

மேலும் கேஜிஎஃப்-2 பார்த்த புஷ்பா பட இயக்குநர் சுகுமார் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை மற்றும் காட்சியமைப்பை மெருகேற்றுவதற்காக புஷ்பா - 2 படத்தின் படபிடிப்பை நிறுத்தி மீண்டும் எடுக்கத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா - 2 படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது. அந்த ட்ரைலரில் புஷ்பா இறந்துவிட்டார் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் புஷ்பா காட்டில் புலி அருகே வரும் காட்சி அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, ட்ரைலரில் வரும் வசனம் உள்ளிட்டவை புஷ்பா 2 படத்தை மேலும் மேறுகேற்றிற்கும் என ரசிகர்கள் கூறு வருகின்றனர். புஷ்பா தி ரூல் படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

banner

Related Stories

Related Stories