இந்தியா

கண்ணை மறைத்த காதல்.. தட்டிக்கேட்ட தம்பியை துண்டு துண்டாக வெட்டிய அக்கா: 8 ஆண்டுக்குபின் சிக்கியது எப்படி?

திருமணத்துக்கு பின் மலர்ந்த அக்காவின் காதலை தட்டி கேட்ட தம்பியை வெட்டிக்கொலை செய்த அக்காவை 8 ஆண்டுகளுக்கு பின்னர் கர்நாடக கால்துறையினர் செய்துள்ளனர்.

கண்ணை மறைத்த காதல்.. தட்டிக்கேட்ட தம்பியை துண்டு துண்டாக வெட்டிய அக்கா: 8 ஆண்டுக்குபின் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் ஜிகானி என்ற பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கண்டறியப்பட்டது. அந்த பாகங்கள் சுமார் 3 பிளாஸ்டிக் பைகளில் வைத்து கட்டி இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த சடலத்தின் தலை பகுதி மட்டும் கிடைக்காமல் இருந்துள்ளது.

இதனால் காவல்துறையினர் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த மர்ம கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரிக்கையில், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியலை காவல்துறையினர் சேகரித்தினர். இந்த சடலம் அந்த பட்டியலில் உள்ளவர் யாரோடது என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

கண்ணை மறைத்த காதல்.. தட்டிக்கேட்ட தம்பியை துண்டு துண்டாக வெட்டிய அக்கா: 8 ஆண்டுக்குபின் சிக்கியது எப்படி?

அப்போது கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்த லிங்கராஜ் என்பவரது என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து லிங்கராஜ் குடும்பத்தாரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் பெரிதாக தெரியவில்லை என்றாலும், விசாரணையில் அவரது சகோதரியின் பதில் முன்னுக்கு பின் முரணாக சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது லிங்கராஜின் சகோதரி பாக்ய ஸ்ரீ என்பவரும், அவரது முன்னாள் காதலனும் சேர்ந்து இவரை கொலை செய்து பாகங்களை வெட்டி வீசியெறிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணை மறைத்த காதல்.. தட்டிக்கேட்ட தம்பியை துண்டு துண்டாக வெட்டிய அக்கா: 8 ஆண்டுக்குபின் சிக்கியது எப்படி?

அதாவது பாக்ய ஸ்ரீ, தான் கல்லூரி படிக்கும்போது சிவபுத்ரா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவரவே, அவர்கள் சாதியை காரணம் காட்டி இருவரின் திருமணத்துக்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி பாக்ய ஸ்ரீ, தனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையையும், சிவபுத்ரா தனது வீட்டில் பார்த்த பெண்ணையும் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.

கண்ணை மறைத்த காதல்.. தட்டிக்கேட்ட தம்பியை துண்டு துண்டாக வெட்டிய அக்கா: 8 ஆண்டுக்குபின் சிக்கியது எப்படி?

ஒரு கட்டத்தில் சிவபுத்ரா, தனது மனைவியை பிரிந்து ஜிகானி பகுதியில் வசித்து வந்துள்ளார். பின்னர் அவரது முன்னாள் காதலிக்கு தொடர்பு கொண்டு பேசி மீண்டும் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் சிவபுத்ராவை தேடி, பாக்ய ஸ்ரீ, அவரது கணவரை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ஜிகானி பகுதியில் தங்களை கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருவரும் வசித்து வந்துள்ளனர்.

கண்ணை மறைத்த காதல்.. தட்டிக்கேட்ட தம்பியை துண்டு துண்டாக வெட்டிய அக்கா: 8 ஆண்டுக்குபின் சிக்கியது எப்படி?

இந்த விவகாரம் பாக்கியாவின் சகோதரர் லிங்கராஜுக்கு ((22) தெரியவரவே, சம்பவத்தன்று பாக்கியாவை வீடு தேடி சென்று கண்டித்துள்ளார். மேலும் தனது சகோதரியை தாக்கியும் உள்ளார். இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட, பாக்கியா அருகில் இருந்த கத்தியை எடுத்து லிங்கராஜை குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்துபோன லிங்கராஜ், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

அப்போது வெளியே சென்றிருந்த சிவபுத்ராவுக்கு பாக்கியா இது குறித்து தெரிவித்தார். இதைக்கேட்டு பதறியடித்து ஓடி வந்த சிவபுத்ரா, இந்த கொலையை மறைக்க எண்ணியுள்ளனர். அதன்படி லிங்கராஜின் உடல்களை 20 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு அந்த பகுதியில் வீசியுள்ளனர்.

கண்ணை மறைத்த காதல்.. தட்டிக்கேட்ட தம்பியை துண்டு துண்டாக வெட்டிய அக்கா: 8 ஆண்டுக்குபின் சிக்கியது எப்படி?

தொடர்ந்து தங்கள் வீட்டை காலி செய்து மகாராஷ்டிராவிலுள்ள நாசிக் பகுதியில் குடியேறி தொடர்ந்து 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து சகோதரி பாக்ய ஸ்ரீ (39), அவரது முன்னாள் காதலன் சிவபுத்ரா கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் தனது முன்னாள் காதலனுடன் வசித்து வந்தத்தால் தட்டி கேட்ட தம்பியை வெட்டிக்கொலை செய்த அக்காவை 8 ஆண்டுகளுக்கு பின்னர் கர்நாடக கால்துறையினர் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories