தமிழ்நாடு

பகலில் வியாபாரி.. இரவில் திருடன்.. திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்.. போலிசில் சிக்கிய முதியவர் !

பல ஆண்டுகளாக திருடி வந்த 62 வயது திருடன், தற்போது போலீசில் வசமாக சிக்கியுள்ள நிலையில் தான் திருடிய பணத்தை வைத்து நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

பகலில் வியாபாரி.. இரவில் திருடன்.. திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்.. போலிசில் சிக்கிய முதியவர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் சுந்தர். இவர் பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு சாலையில் பூச்சி மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது கடையில் கடந்த 10-ம் தேதி திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

பின்னர் காலை நேரத்தில் அங்கு வந்த சுந்தர் தனது கடையில் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகாரும் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கைரேகை, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

பகலில் வியாபாரி.. இரவில் திருடன்.. திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்.. போலிசில் சிக்கிய முதியவர் !

ஆனால் அந்த பகுதியை சுற்றி இந்த திருடன் குறித்த எந்த தகவலும் போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து விசாரிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்த சிசிடிவி காட்சியில் இருக்கும் நபர் மீது வழக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் தங்கள் விசாரணையை துரிதப்படுத்திய அதிகாரிகள், அந்த குற்றவாளியை கண்டறிந்தனர்.

பகலில் வியாபாரி.. இரவில் திருடன்.. திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்.. போலிசில் சிக்கிய முதியவர் !

அப்போது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 62 வயதுடைய சாகுல் ஹமீதுதான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர். மேலும் மீதமுள்ள பணம் குறித்து விசாரிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார். அதாவது மருதமலை படத்தில் "அத செலவு பண்ணிட்டேன்.." என்று வடிவேலு கூலாக சொல்வது போல் இவரும் பதிலளித்தார்.

பகலில் வியாபாரி.. இரவில் திருடன்.. திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்.. போலிசில் சிக்கிய முதியவர் !

அந்த பணத்தை வைத்து கேரளாவில் சொகுசு விடுதியில் சில நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக கூறினார். ஆரம்பத்தில் இதனை நம்பாத அதிகாரிகள், தொடர் விசாரணையில் இவர் கூறியது உண்மை என தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரிக்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இதனை செய்து வந்துள்ளதும், இவர் பகலில் மருந்து வியாபாரியாகவும், இரவில் திருடனாகவும் இருந்து வந்துள்ளது தெரியவந்தது.

மேலும் அவருக்கு மதுரையில் ஒரு மனைவி, கேரளாவில் ஒரு மனைவி என 2 மனைவிகள் உள்ளதாகவும் விசாரணையில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். பல ஆண்டுகளாக திருடி வந்த திருடன், தற்போது 60 வயதில் போலீசில் வசமாக சிக்கியுள்ள நிலையில் தான் திருடிய பணத்தை வைத்து நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories