இந்தியா

காதலியின் திருமணத்தை நிறுத்தி தற்கொலை செய்துகொண்ட ஒரு தலை காதலன்.. பெங்களுருவில் அதிர்வலை !

இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ய இருந்ததால் விரக்தி அடைந்த மாப்பிள்ளை, திருமணத்தை நிறுத்தியதோடு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியின் திருமணத்தை நிறுத்தி தற்கொலை செய்துகொண்ட ஒரு தலை காதலன்.. பெங்களுருவில் அதிர்வலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது தொட்டபள்ளாப்புரா (doddaballapur). இங்கு நவதா என்ற இளம்பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் 'காதி சுப்ரமணிய திருமண மண்டபத்தில்' திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருமணம் பெண்ணின் பள்ளி நண்பரால் நின்றுள்ளது.

திருமணம் நடக்கும் நாளன்று காலையில் நிதேஷ் என்ற இளைஞர் முகூர்த்த நேரத்திற்கு முன்பாக மண்டபத்திற்கு வந்துள்ளார். மேலும் இந்த திருமணத்தை நிறுத்தும்படியும், தானும் நவதாவும் காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும், இருவரும் எடுத்துக்கொண்டு புகைப்பங்களை காண்பித்துள்ளார். இதனை மணமகன் வீட்டார் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோனர்

காதலியின் திருமணத்தை நிறுத்தி தற்கொலை செய்துகொண்ட ஒரு தலை காதலன்.. பெங்களுருவில் அதிர்வலை !

அதோடு மணமகள் குடும்பத்தார் இதுகுறித்து நவதாவிடம் விசாரித்தனர். அப்போது தானும் நிதேஷும் நண்பர்களாக மட்டும்தான் பழகி வந்ததாக கூறினார். மேலும் தான் அவரை காதலிக்கவே இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து இந்த வாக்குவாதம் ஏற்படவே பெண்ணின் வீட்டார், நிதேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இரத்த கோரங்கள் ஏற்பட்டுள்ளது.

காதலியின் திருமணத்தை நிறுத்தி தற்கொலை செய்துகொண்ட ஒரு தலை காதலன்.. பெங்களுருவில் அதிர்வலை !

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான் நிதீஷ், தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை அக்கம்பத்தினர் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் பெரும் அவசத்தைக்கு உள்ளதாக மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர்.

தொடர்ந்து இந்த சம்பவம் பெரும் பூதாகரமாக ஆன நிலையில், இதுகுறித்து காவல்துறையில் பெண் வீட்டு தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் நவதாவும், நிதேஷும் பள்ளி நண்பர்களாக இருந்துள்ளனர். பள்ளி முடிந்து இருவரும் தொடர்பில் இல்லாத நிலையில், பள்ளி மாணவர்கள் சேர்ந்து வாட்சப்பில் குழு ஒன்று அமைத்தனர். அதில் இணைந்த இவர்கள் அதன் மூலம் மீண்டும் நண்பர்களாகியுள்ளனர்.

காதலியின் திருமணத்தை நிறுத்தி தற்கொலை செய்துகொண்ட ஒரு தலை காதலன்.. பெங்களுருவில் அதிர்வலை !

இருவரும் தொடர்ந்து பேசி, அவ்வப்போது சந்தித்தும் வந்துள்ளனர். ஆனால் நவதாவை நிதேஷ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அந்த பெண் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனிடைய அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த நிதேஷ் அவரது திருமணத்தை நிறுத்த பிரச்னையில் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ய இருந்ததால் விரக்தி அடைந்த மாப்பிள்ளை, திருமணத்தை நிறுத்தியதோடு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories