இந்தியா

பாஜக MLA வீட்டில் சிக்கிய ரூ. 6 கோடி.. கைது செய்ய கோரி போராடிய முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் இல்லத்துக்கு வெளியே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கைது செய்யப்பட்டார்.

பாஜக MLA வீட்டில் சிக்கிய ரூ. 6 கோடி.. கைது செய்ய கோரி போராடிய முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

பாஜக MLA வீட்டில் சிக்கிய ரூ. 6 கோடி.. கைது செய்ய கோரி போராடிய முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது!

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ மதல் விருப்பக்‌ஷாவின் மகன் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருப்பக்‌ஷா. இவர் கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

பாஜக MLA வீட்டில் சிக்கிய ரூ. 6 கோடி.. கைது செய்ய கோரி போராடிய முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது!

இவரின் மகன் பிரசாந்த் மதல் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (BWSSB)தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் தந்தை சார்பில், கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் டெண்டர் வழங்க ஒருவரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக்ஆயுக்தா போலிஸார் அவரை அதிரடியாக கைதுசெய்தனர்.

அதனைத் தொடர்ந்து அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருப்பக்‌ஷாவை உடனடியாக கைது செய்ய வேண்டும், முதல்வர் பசவராஜ் பொம்மை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு நகரில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக MLA வீட்டில் சிக்கிய ரூ. 6 கோடி.. கைது செய்ய கோரி போராடிய முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் சுர்ஜேவாலா ஆகியோர் தலைமை தாங்கினார். பின்னர் காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாக முதல்வர் பசவராஜ் பொம்மை வீட்டை நோக்கிச் சென்றனர். அப்போது போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட சித்தராமையா, சுர்ஜேவாலா, ரிஸ்வான் அர்சத், தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்ளை போலிஸார் கைது செய்தனர். கர்நாடகாவில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் இருந்து ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பசவராஜ் பொம்மை அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories