அரசியல்

‘புதிய தலைமைச் செயலகம்?.. 5 நாள் தான்.. போராட்டம் வெடிக்கும்’ : தவெக அரசுக்கு கெடு விதித்த மீனவர்கள்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, தவெக அரசுக்கு எதிராக மீனவ கிராம மக்கள் கடைகளை அடைத்தும், கறுப்புக் கொடிகளை ஏந்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம்

‘புதிய தலைமைச் செயலகம்?.. 5 நாள் தான்.. போராட்டம் வெடிக்கும்’ : தவெக அரசுக்கு கெடு விதித்த மீனவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் விளையாட்டு மைதானத்தில் சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ளதாக தவெக அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை எண்ணூர் முதல் கோவளம் குப்பம் வரை உள்ள அனைத்து மீனவ கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 08 ஆம் தேதி அன்று பட்டினம்பாக்கத்தில் 20 லட்சம் சதுர பரப்பளவில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அரசாணையை தவெக அரசு வெளியிட்டது.

அரசாணைப்படி பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் மீனவ கிராம மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவோம். எங்களுடைய பூர்வீக இடம் இந்த இடத்தில் தான் இருக்கிறது. பல்வேறு பள்ளிகள் கல்லூரிகள் இங்கு இருக்கிறது அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எங்கள் உயிரே போனாலும் இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அனுமதிக்க மாட்டோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘புதிய தலைமைச் செயலகம்?.. 5 நாள் தான்.. போராட்டம் வெடிக்கும்’ : தவெக அரசுக்கு கெடு விதித்த மீனவர்கள்!

சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். சென்னை எண்ணூரில் இருந்து கோவளம் வரை உள்ள மீனவ கிராமத்தினர் போராட்டத்தில் பங்கேற்று தவெக அரசுக்கு எதிராக கண்டன் முழக்கங்களை எழுப்பியதோடு, கறுப்புக் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

இதுகுறித்து மீன்வர்கள் தரப்பினர் செய்தியாளர்களை சந்திக்கையில், ”பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மீனவர்களின் போராட்ட வரலாறு தவெக ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை என்றால், அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்த அரசாணையை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாடு பாண்டிச்சேரியை இணைத்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். தமிழ்நாடு மிகப்பெரிய ஒரு கொந்தளிப்பை பார்க்கும். ஆங்காங்கே மீனவர்கள் போராட்டத்தில் இறங்குவார்கள்” என தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமைச் செயலகம் குறித்த அரசாணை வெளியிட்டதிலிருந்தே மீனவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துவரும் நிலையில், தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் இது குறித்த அரசாணையை தவெக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதே மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

banner

Related Stories

Related Stories