இந்தியா

சும்மா ஒரு விளம்பரம்.. திருபாய் அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் கடுப்பான போலிஸ்!

மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சும்மா ஒரு விளம்பரம்.. திருபாய் அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் கடுப்பான போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பை நகரத்தில் திருவாய் அம்பானி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள தொலைப்பேசி எண்ணிற்கு இன்று அதிகாலை ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசியவர் தன்னை விக்ரம் சிங் என அறிமுகப் படித்துக் கொண்டு, பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

சும்மா ஒரு விளம்பரம்.. திருபாய் அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் கடுப்பான போலிஸ்!

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளது. பிறகு அங்கு வந்த போலிஸார் பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் தொலைபேசியில் மர்ம நபர் கூறிய படி எங்கும் வெடிகுண்டு இல்லை.

இதையடுத்து அதே நபர் பள்ளிக்கு மீண்டும் தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது ஒரு விளம்பரத்திற்காக பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாகப் பொய் சொன்னதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

சும்மா ஒரு விளம்பரம்.. திருபாய் அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் கடுப்பான போலிஸ்!

பின்னர் போலிஸார் விளம்பரத்திற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விக்ரம் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விளம்பரத்திற்காக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் மும்பை முழுவதும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories