முரசொலி தலையங்கம்

விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!

கடந்த 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரத்துக்கு விலை என்ன என்பதை நாடு அறியும். இவை போதாது என்று அதிமுக MLAக்களை பதவி விலக வைத்து வருகிறார் 'துர்நாற்ற சக்தி' விஜய்- முரசொலி தலையங்கம்

விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

02.07.2026

விஜய் ஆசீர்வதிக்கும் விஜயபாஸ்கர்கள்!

“அரசாங்கப் பணத்தை தொட மாட்டேன். தொட்டால் விட மாட் டேன். இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விட மாட்டேன்” என்பது ‘தூய சக்தி' விஜய்யின் பொய்வேட கப்சாக்களில் ஒன்றாகும். அந்த தூய சக்தி, கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டு காலத்தில் செலவழித்த தொகை எவ்வளவு, அதைச் செலவு செய்தவர்கள் யார் என்பதைச் சொல்ல முன் வருவாரா?

விஜய்க்கு ஏற்கனவே 'வரி கட்டாத புலி' என்றுதான் பெயர். ‘புலி’ திரைப்படத்துக்காக பெற்ற வருமானத்தில், ரூ.15 கோடியைக் கணக்கில் காட்டாமல் மறைத்ததை வருமான வரித்துறை ஆதாரங்களுடன் கண்டுபிடித்தது. இந்த அப்பட்டமான வரி ஏய்ப்பிற்காக ரூ.1.5 கோடி அபராதம் (Penalty) விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தில் இருந்து தப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் விஜய். கடந்த பிப்ரவரி 6 அன்று உயர் நீதிமன்றம் விஜய் மனுவைத் தள்ளுபடி செய்தது. 'வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான், அபராதத்தைச் செலுத்தியே தீர வேண்டும்' என்று அதிரடித் தீர்ப்பளித்தது.

ஏற்கனவே வெளிநாட்டு இறக்குமதி காருக்கு வரிக் கட்டாத வழக்கும் அவர் மீது உண்டு. "நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும், வரி ஏய்ப்பவர்களாக இருக்கக் கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியால் கண்டிக்கப்பட்டவர்தான் அவர்.

கடந்த நாற்பது நாட்களாக நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரத்துக்கு விலை என்ன என்பதை நாடு அறியும். இவை போதாது என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக வைத்து வருகிறார் 'துர்நாற்ற சக்தி' விஜய். அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டு த.வெ.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுகிறவர்கள் அனைவரும் துர்நாற்ற சக்திகள் தான் என்பதை மக்கள் அறிவார்கள்.

விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!

விராலிமலை விஜயபாஸ்கருக்கு 'குட்கா விஜயபாஸ்கர்' என்று தான் பெயர். சென்னையில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது. குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்துகிறது. அப்போது தங்களது வியாபாரத்துக்கு துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள்.

இது தொடர்பான வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், "டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப்படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இரு டி.ஜி.பி.க்கள் பெயர்கள் இருந்தன. விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்துறை அனுப்பி இருந்தது. அவரைத் தான் எம்.எல்.ஏ. பதவி விலக வைத்து த.வெ.க.வில் இணைத்துக் கொள்கிறார் துர்நாற்ற சக்தி விஜய்.

விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!

டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். (2023 மே. 22) வழக்கு நடந்து கொண்டு இருக் கிறது. இவரைத் தான் சேர்த்துக் கொள்கிறார் துர்நாற்ற சக்தி விஜய். கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போலிப் பத்திரம் தயாரித்து போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்.

வேறு ஒருவருக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்துக்கு போலிப் பத்திரம் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இது தொடர்பாக குற்றச்சாட்டு பதிவானதும் கரூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டார் அவர். நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே தலைமறைவு ஆனார். கேரளாவில் பதுங்கி இருந்த அவரை தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்து இழுத்து வந்தார்கள். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக வருமான வரித்துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.

இதெல்லாம் அவர் அரசியலுக்கு நுழைந்த காலத்தில், அமைச்சர் ஆவதற்கு முன்பு நடந்தது அல்ல. அமைச்சராக இருந்த பிறகு நடந்தவை ஆகும். 2024 ஜூலை மாதத்தில் நடந்தவை ஆகும். இந்த யோக்கிய சிகாமணியையும் இணைத்துக் கொள்ள இருக்கிறார் துர்நாற்ற சக்தி விஜய்.

முதலமைச்சர் விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறதா?

banner

Related Stories

Related Stories